News April 25, 2025
ரயில்வேயில் வேலை வாய்ப்பு

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 9,970 உதவி லோகோ பைலட் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தெற்கு ரயில்வே சார்பில் 510 காலிபணியிடங்கள் உள்ளது. மாத ஊதியமாக ரூ.19,900 வழங்கப்படும். இதற்கு <
Similar News
News April 25, 2025
ஸ்ரீ கந்த பெருமாள் திருக்கோவிலில் சிறப்பு பூஜை

நஞ்சியம்பாளையம் ஊராட்சி துளசி மேட்டுப்பாதையில் உள்ளது அருள்மிகு கந்தபெருமான் திருக்கோவில். நேற்று குப்புச்சிபாளையம் இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பாக சிறப்பு பூஜைகள் அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றன. இதில், 16 வகையான அபிஷேக பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்ட பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
News April 25, 2025
திருப்பூர்: இடி மின்னலுடன் மழை..மக்களே உஷார்

தமிழ்நாட்டில் இன்று (ஏப்ரல் 25) 20 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களான திருச்சி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், நீலகிரி, கோயம்பத்தூர், உள்ளிட்ட 20 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிப்பு
News April 25, 2025
அரசு அசத்தல்.. திருப்பூரில் 6,000 பேர் பயன்

தமிழகம் முழுவதும் தமிழக அரசு சார்பில் சமீபத்தில் முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டன. திருப்பூரில் பழங்கரை, சோமவாரப்பட்டி, முத்தூர், அவிநாசி, ருத்திர பாளையம், சின்ன வீரன் பட்டி, ஊத்துக்குளி, சிவன்மலை உள்ளிட்ட 14 இடங்களில் முதலாவதாக மருந்தகங்கள் திறக்கப்பட்டதிலிருந்து, தற்போது வரை 6,081 பேர் மருந்து மாத்திரை வாங்கி பயனடைந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.