News September 14, 2024

ரயில்கள் ரத்து: கூடுதலாக சிறப்பு பேருந்து இயக்க முடிவு

image

தாம்பரம் ரயில் நிலையத்தில் நாளை (செப்.15) காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் செல்லும் ரயில்கள் பல்லாவரம் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். நாளை அவ்வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் நலன் கருதி கூடுதலாக 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக மாநகர போக்குவரத்துக்கு கழகம் தெரிவித்துள்ளது.

Similar News

News November 9, 2025

செங்கல்பட்டு: 8th பாஸ் போதும்; ரூ.58,000 சம்பளத்தில் அரசு வேலை

image

தமிழ்நாடு நெடுஞ்சாலை துறையில் மாவட்ட வாரியாக அலுவலக உதவியாளர் மற்றும் அலுவலக காவலர் போன்ற காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 8ம் வகுப்பு தகுதிபெற்று, 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாக இருக்கவேண்டும். மாத சம்பளமாக ரூ.15,700 – ரூ.58,100 வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள்<> இங்கே கிளிக் <<>>செய்து நவ.26ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும். உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News November 9, 2025

செங்கல்பட்டு: இந்த மெசேஜ் உங்களுக்கு வந்ததா?

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் திருக்கழுக்குன்றம் திருப்போரூர் மதுராந்தகம் ஆகிய தாலுகாவில் உள்ள கிராம உதவியாளர் பணிக்கான தேர்வு இன்று நடைபெற இருந்த நிலையில் தற்போது தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தேர்வரின் மொபைல் எண்ணுக்கு மெசேஜ்களும் வந்துள்ளனர், நிர்வாக காரணங்களால் மாற்றப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வில் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது.

News November 9, 2025

செங்கல்பட்டு: தெருநாய்க்கு விஷம் வைத்து கொலை

image

புதுபெருங்களத்துார், சீனிவாசா நகர், முத்தமிழ் தெருவை சேர்ந்தவர் தீபா, 30. வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். அதோடு, 2 தெரு நாய்களையும் வளர்த்து வந்தார். அதே தெருவை சேர்ந்தவர் ஜெகன்குமார் தீபா வளர்க்கும் தெரு நாய்கள், குழந்தைகளை கடிக்க பாய்ந்து வந்ததாகவும், தெருவில் செல்வோரை விரட்டியதாகவும் விஷம் வைத்து கொன்றுள்ளார். இந்த வழக்கில், இருவர் நீதிமன்ற ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

error: Content is protected !!