News November 23, 2024
ரயில்களில் கூடுதலாக 6 பெட்டிகள்

சென்னை தாம்பரத்திலிருந்து செங்கோட்டைக்கு வாரம் 3 முறை இயக்கப்படும் சிலம்பு சூப்பர் பாஸ்ட் ரயிலுக்கும், அதேபோன்று திருநெல்வேலி வழியாக நாகர்கோவிலுக்கு வாரம் 3 நாட்கள் இயக்கப்படும் சூப்பர் பாஸ்ட் ரயிலுக்கும் கூடுதலாக 6 பெட்டிகள் விரைவில் இணைக்கப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை தென்னக ரயில்வே வெளியிட்டுள்ளது. இதனால் இந்த வழித்தட ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Similar News
News September 15, 2025
நெல்லை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா??

நெல்லை மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <
News September 15, 2025
நெல்லை: ஆட்டோ டிரைவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை

கீழ வைராவிகுளத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம் (55). இவர் ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இவர் 6ம் வகுப்பு படிக்கும் பத்து வயது சிறுமியை தனது ஆட்டோவில் பள்ளியில் விடுவதாக அழைத்து சென்று ஆட்டோவில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமி தெரிவித்த தகவலின் படி பெற்றோர் புகார் அளித்தனர். அனைத்து மகளிர் போலீசார் போக்ஸோ மற்றும் 6 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து தலைமறைவான ஆட்டோ டிரைவரை தேடி வருகின்றனர்.
News September 15, 2025
நெல்லையில் இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகள்

# இன்று காலை பத்து முப்பது மணிக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது.
# திருநெல்வேலி மாநகராட்சி 55 வார்டுகளிலும் இன்று காலை 10 மணி முதல்பகுதி சபா கூட்டம் நடைபெறுகிறது.
# அண்ணா பிறந்த தினத்தை முன்னிட்டு அண்ணா சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி காலை 9 மணி முதல் நடக்கிறது. மற்றவர்களும் தெரிந்து கொள்ள SHARE….