News March 28, 2025
ரயிலில் 26 கிலோ கஞ்சா பறிமுதல்

டாட்டா நகரில் இருந்து அரக்கோணம் வழியாக கேரள மாநிலம் எர்ணாகுளம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில், ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் நேற்று சோதனை நடத்தினர். அப்போது பொதுப் பெட்டியில் கேட்பாரற்று கிடந்த மூன்று பைகளை போலீசார் மீட்டு சோதனை நடத்தினர். இதில் 26 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து பறிமுதல் செய்த கஞ்சாவை காஞ்சிபுரம் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
Similar News
News December 24, 2025
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை தினந்தோறும் எச்சரிக்கை பதிவு வெளியிட்டு வருகிறது. இன்றைய பதிவில், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. கதவுகள், ஜன்னல்கள் முறையாக பூட்டப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். அண்டை வீட்டார் சந்தேகத்துக்குரிய நபர்கள் குறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்க வேண்டும் என அறிவித்துள்ளது.
News December 24, 2025
ராணிப்பேட்டை: அரசு பஸ் மோதி பெண் பலி!

ராணிப்பேட்டை எஸ்.எம்.எச் மருத்துவமனை அருகில் இன்று (டிச.24) வாலாஜாவை சேர்ந்த செவிலியராக பணிபுரியும் கலைச்செல்வி என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென நிலை தடுமாறி ரோட்டில் கீழே விழுந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் தற்போது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 24, 2025
ராணிப்பேட்டை: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க


