News April 2, 2025
ரயிலில் 20 கிலோ கஞ்சாவுடன் இருவர் சிக்கினர்

சென்னை-ராமேஸ்வரம் விரைவு ரயில் முன்பதிவில்லா பெட்டியில் திருச்சி-மண்டபம் வரை பயணித்த பயணிகளின் உடைமைகளை போலீசார் இன்று அதிகாலை திடீர் சோதனை செய்தனர். இதில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிரதேஷ் மொகாந்தி 28, பிரியா பாரத் மொகாந்தி 40 ஆகியோரின் உடைமைகளை பரிசோதித்தனர். அப்பொழுது இருவரிடமும் 19.700 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த ரயில்வே போலீசார் இருவரையும் போதைப் பொருள் தடுப்பு போலீசில் ஒப்படைத்தனர்.
Similar News
News April 3, 2025
ராமநாதபுரம்: வேலை வாய்ப்பு முகாம்

ராமநாதபுர மக்களே டான்செம் நிறுவனம் சார்பில் விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டம் வீரசோழன் அமீன் திருமண மண்டபத்தில் ஏப்.9-ல் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில் விருதுநகர்,ராமநாதபுரம் அதனை சுற்றியுள்ள மாவட்டத்தில் டிகிரி, ஐடிஐ, பாலிடெக்னிக், பொறியியல், ஹோட்டல் மேனேஜ்மென்ட், செவிலியர்கள் படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். விவரங்களுக்கு 86818-78889, 95148-38485 இல் அழைக்கலாம். SHARE செய்து உதவவும்
News April 3, 2025
மூதாட்டி இறப்பில் மர்மம்

திருவாடானை பகுதியை சேர்ந்தவர் சிங்காரம் இவருக்கு இரு மனைவிகள்.இதில் வீரம்மாள் முதல் மனைவி. வள்ளி இரண்டாவது மனைவி. சிங்காரம் இறந்து விட்டதால் வீரம்மாள், அவரது தங்கை பரிமளத்துடன் வாழ்ந்து வந்தார்.நேற்று முன்தினம் வீரம்மாள் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தார். உடலை உறவினர்கள் அடக்கம் செய்ய முயன்ற போது இரண்டாவது மனைவி வள்ளியின் மகன் சி+ன்னத்தம்பி இறப்பில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் செய்தார்.
News April 2, 2025
நினைத்தை நிறைவேற்றும் நவபாஷாண நவக்கிரக கோயில்

கடலுக்குள் இருக்கும் தேவிபட்டினம் நவபாஷாண நவக்கிரகங்கள் உள்ள தலத்தில் நீராடினால் மிகவும் புண்ணியம் சேரும் என்பது நம்பிக்கை. இந்த கோயிலுக்கு சென்று வழிபட்டால், களத்திர தோஷம், நாக தோஷம், மாங்கல்ய தோஷம், சர்ப்ப தோஷம், பிதுர் தோஷம், ஆயுள் தோஷம், நட்சத்திர தோஷம், சனி தோஷம், பிரம்மஹத்தி தோஷம், செவ்வாய் தோஷம் உள்ளிட்டவை நீங்கி நினைத்தது நிறைவேறும். இதை SHARE பண்ணுங்க.