News December 17, 2025

ரயிலில் வெயிட்டிங் லிஸ்ட்டா? நிம்மதி தரும் மாற்றம்

image

வெயிட்டிங் லிஸ்ட் பயணிகள் மாற்று ஏற்பாடுகளை செய்ய, ரயில்வே சில மாற்றங்களை செய்துள்ளது. அதன்படி, காலை 5 – மதியம் 2 மணி வரை புறப்படும் ரயில்களுக்கான Chart, முந்தைய நாள் இரவு 8 மணிக்கு தயார் செய்யப்படும். மதியம் 2:01 மணி முதல் மறுநாள் அதிகாலை 5 மணி வரையிலான ரயில்களுக்கு, 10 மணி நேரத்திற்கு முன்பு தயாரிக்கப்படும். முன்னதாக, ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பே இது தயாரிக்கப்பட்டது.

Similar News

News December 18, 2025

நேரத்தை மிச்சம் செய்யும் shortcuts

image

கம்ப்யூட்டரில் சில கீபோர்டு ஷார்ட்கட்ஸ் பணிகளை எளிதாகவும் வேகமாகவும் முடிக்க உதவுகின்றன. அன்றாட பணிகளில் கீபோர்டு ஷார்ட்கட்ஸ் பயன்படுத்துவது, குறைந்த நேரத்தில் அதிக உற்பத்தித்திறனுடன் செயல்பட உதவுகிறது. உங்கள் நேரத்தை சேமித்து, பணியை எளிதாக்கும் சில கீபோர்டு ஷார்ட்கட்ஸை மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.

News December 18, 2025

விஜய்க்கு ஓட்டு போடலனா விஷம் தான்: பெண் தொண்டர்

image

விஜய் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கும், மக்களுக்கு நல்ல சலுகைகளை வழங்குவார் என இளம்பெண் ஒருவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஈரோடு பரப்புரையில் கலந்துகொண்ட அப்பெண், தனது வீட்டில் 9 பேர் வாக்களிக்கும் தகுதியுடன் உள்ளதாகவும், அவர்கள் அனைவரும் விஜய்க்கு தான் வாக்களிப்பார்கள் என்றார். ஒருவேளை விஜய்க்கு வாக்களிக்கவில்லை என்றால், சோற்றில் விஷம் வைத்துவிடுவேன் என்று கேலியாக தெரிவித்தார்.

News December 18, 2025

மகளிர் உரிமைத் தொகை.. இரட்டிப்பான ஹேப்பி நியூஸ்

image

புதிதாக மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்கள் ஆன்லைனில் மேல்முறையீடு செய்து வருகின்றனர். <>kmut.tnega.org<<>> இணையதளத்தில் மேல்முறையீடு செய்ய TN அரசு ஏற்பாடு செய்துள்ளது. உடனே அப்ளை பண்ணுங்க. இதுஒருபுறம் இருக்க, மகளிர் உரிமைத் தொகையை ₹1,000-ல் இருந்து மேலும் சில நூறுகள் அதிகரிக்க அரசு திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. மகளிர் உரிமைத் தொகை உயர்த்தப்படும் என ஸ்டாலின் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.

error: Content is protected !!