News March 30, 2026

ரயிலில் போன் தொலைந்து விட்டதா? இத செய்யுங்க!

image

கூட்டம் நிரம்பி வழியும் ரயிலில் போன் தொலைந்துவிட்டதா? உடனே ரயில்வேயின் <>https://railmadad.indianrailways.gov.in/<<>> இணையத்தில் அல்லது RailMadad செயலியில் புகார் அளிக்கலாம். இதற்கு கண்டிப்பாக தொலைந்த போனின் IMEI தெரிந்திருக்க வேண்டும். திருடியவர் போனை உபயோகிக்க முடியாமல், போன் உடனடியாக Block செய்யப்படும். Location மூலம் போன் Track செய்யப்பட்டு மீட்டு கொடுக்கப்படும். அனைவருக்கும் இப்பதிவை பகிரவும்.

Similar News

News April 5, 2026

ஆபாச வெப்சைட்டில் ஜான்வி கபூர் போட்டோ

image

Deepfake டெக்னாலஜி பெண்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டு வருவது குறித்த புகார்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், 15 வயதில் தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவம் குறித்து ஜான்வி கபூர் பேசியுள்ளார். ஸ்கூல் படிக்கும் போது, மார்பிங் செய்யப்பட்ட தனது போட்டோக்களை ஆபாச வெப்சைட்டில் பார்த்ததாக குறிப்பிட்டுள்ளார். சக மாணவர்கள் சிலர் இதனை பார்ப்பதை கண்டு, தான் மிகுந்த வேதனை அடைந்ததாகவும் ஜான்வி கூறியுள்ளார்.

News April 5, 2026

நாளையுடன் பொதுத்தேர்வு நிறைவு.. பறந்த உத்தரவு

image

10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நாளையுடன் நிறைவடைகிறது. விடைத்தாள் திருத்தும் பணி தொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கும் முக்கிய உத்தரவு பறந்துள்ளது. அதன்படி, மதிப்பீட்டு பணிக்கு அனுப்பப்படும் ஆசிரியர்களுக்கு ஏப்.9-க்குள் நியமன ஆணையை வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், எந்த பள்ளியில் இருந்தும் ஆசிரியர் விடுபடாத வகையில் கண்காணிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT

News April 5, 2026

Whatsapp ஆடியோ கால்களை ரெக்கார்ட் செய்ய முடியுமா?

image

இந்த வசதியை Whatsapp வழங்குவதில்லை. ஆனால், சில டெக்னிக்களின் மூலம் ரெக்கார்டு செய்யலாம். ஆண்ட்ராய்டு போனில் ‘Screen Recording’ வசதி உள்ளது. Whatsapp-ல் கால் வரும்போது, இந்த ஆப்ஷனை On பண்ணுங்க. இது ஆடியோ, வீடியோ இரண்டையும் பதிவு செய்யும். போன் பேசி முடித்ததும், Off செய்தால், கேலரியில் அது வீடியோ file-ஆக இது பதிவாகி இருக்கும். ஆனால், ஒருவரின் அனுமதியின்றி உரையாடலை ரெக்கார்டு செய்வது சரியானது அல்ல!

error: Content is protected !!