News September 4, 2024
ரயிலில் பெண்ணிடம் சில்மிஷம்: 4 பேர் கைது

அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து அரக்கோணம் வரும் ரயிலில் 19 வயது இளம் பெண்ணிடம் 4 வாலிபர்கள் தகாத முறையில் நடந்து கொண்டனர். இளம்பெண் ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். அரக்கோணம் ரயில்வே இன்ஸ்பெக்டர் வடிவுக்கரசி விசாரணை நடத்தி, பீகாரைச் சேர்ந்த ஹக்கீம், மஜ்ருல் ஜுல்பாகர், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தர்மே சர்கார் ஆகிய 4 பேரை இன்று அரக்கோணத்தில் கைது செய்தார்.
Similar News
News September 9, 2025
கட்டணமில்லா பயிற்சி வகுப்பு தொடக்கம்

ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் 2ம் நிலை காவலர் காலி பணியிட எழுத்துத் தேர்விற்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் இன்று(09.09.2025) காலை 10:30 மணிக்கு தொடங்கப்பட்டது. சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டனர்
News September 9, 2025
இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( செப் -09) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது ராணிப்பேட்டை ஆற்காடு சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் 9884098100
News September 9, 2025
நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திரகலா இன்று ஆற்காடு ஊராட்சி ஒன்றியம், தாஜ்புரா ஊராட்சி MN மஹாலில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமினை பார்வையிட்டு உடனடி தீர்வு காணப்பட்ட மனுக்கள் மீது பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். உடன் துணை ஆட்சியர் கீதாலட்சுமி, வட்டாட்சியர்கள் மகாலட்சுமி, நடராஜன், ஊராட்சி மன்றத் தலைவர் லட்சுமி சேட்டு மற்றும் பலர் உள்ளனர்.