News October 23, 2024

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் ரூ.5000 அபராதம்

image

ரயில்களில் பட்டாசு எடுத்து சென்றால், 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது, ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே பாதுகாப்பு படையினர், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வரும் மக்களை எச்சரித்து வருகின்றனர். முதல் முறையாக பிடிபட்டால், ரூ.1,000 அபராதம் அல்லது 6 மாதம் சிறை தண்டனை வழங்கப்படும். மேலும், தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபட்டால், 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை என எச்சரிக்கை விடுத்தனர்.

Similar News

News September 12, 2025

இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம் செயல்பாடு

image

சென்னை போலீசாரின் “Knights on Night Rounds” (12.09.2025) இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். 
இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்.

News September 12, 2025

சென்னை மெட்ரோ வாட்ஸ்அப் டிக்கெட் சேவை பாதிப்பு

image

வாட்ஸ்அப் ஆன்லைன் டிக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சென்னை மெட்ரோவின் வாட்ஸ்அப் சாட்பாட் சேவை தற்காலிகமாக இயங்கவில்லை. பயணிகள் CMRL மொபைல் செயலி, Paytm, PhonePe, Singara Chennai Card மற்றும் பயண அட்டைகள் மூலம் டிக்கெட்டுகளை பெறலாம். மேலும் தகவல் வரும் வரை கவுண்டர்களிலும் டிக்கெட் வழங்கப்படும் என CMRL அறிவித்துள்ளது.

News September 12, 2025

சென்னையில் தீரா நோய்களை தீர்க்கும் திருச்செந்தூர் முருகன்

image

சென்னை கே.கே நகரில் புகழ்பெற்ற ‘திருச்செந்தூர் முருகன் கோயில்’ உள்ளது. பொதுவாக திருச்செந்தூரில் உள்ள முருகன் கோயிலுக்கு செல்ல முடியாதவர்கள் கே.கே நகரில் அமைந்துள்ள இக்கோயிலுக்கு வந்து திருச்செந்தூர் முருகனை வணங்கி வழிபடுகின்றனர். இக்கோயிலுக்கு வந்து வழிபட்டால், தீராத நோய்களும் தீரும் என்றும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!