News April 27, 2025

ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள் கவனத்திற்கு

image

பாலியல் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால், ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள், ரயில்களில் அல்லது ரயில் நிலையங்களில் பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டால் 9962500500 என்ற எண்ணுக்கு உடனே அழைக்கவும். ரயில்வே காவல் உதவி எண் 1512 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம். தனியாக செல்லும் பெண்கள் இந்த நம்பர்களை உங்கள் மொபைலில் கட்டாயம் வைத்து கொள்ளுங்கள். உங்கள் தோழிகளுக்கு ஷேர் பண்ணுங்க

Similar News

News August 25, 2025

விஜயகாந்தின் வாழ்வில் கள்ளக்குறிச்சி

image

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 73வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது அரசியல் வாழ்வில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு முக்கியப் பங்குண்டு. 2011 சட்டமன்றத் தேர்தலில் ரிஷிவந்தியம் தொகுதியில் வெற்றி பெற்று எதிர்க்கட்சித் தலைவரானார். ஆனால், 2016 தேர்தலில் உளுந்தூர்பேட்டையில் முதல்வர் வேட்பாளராக களம் கண்ட அவர், தோல்வியடைந்தார். இதனால், அவரது அரசியல் பயணத்தில் பெரும் பின்னடைவைச் சந்தித்தார்.

News August 25, 2025

கள்ளக்குறிச்சி: ஆன்லைன் மோசடி, மக்களே உஷார்!

image

அறிமுகமில்லாத நபர்களிடமிருந்து வரும் வீடியோ அழைப்புகள், சமூக வலைத்தளங்களில் வரும் ஆன்லைன் வர்த்தகம், கடன், கிரெடிட் கார்டு, ஏடிஎம் கார்டு புதுப்பித்தல் போன்றவற்றை நம்பி ஏமாற வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பணம் இழந்தால் 24 மணி நேரத்திற்குள் 1930 என்ற எண்ணிற்கு அழைத்து அல்லது www.cybercrime.gov.in இணையதளத்தில் புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News August 24, 2025

கள்ளக்குறிச்சி: மாதம் 15,000 சம்பளத்தில் வேலை

image

கள்ளக்குறிச்சியில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் பணிபுறிய காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு மாதம் ரூ.15,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. 21 வயது முதல் 41 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் விருப்பமுள்ளவர்கள் மாதம் ஆகஸ்ட்- 31ஆம் தேதிக்குள் இந்த <>லிங்கில் <<>>பதிவு செய்துகொள்ளலாம். சொந்த ஊரில் வேலை தேடுவோருக்கு ஷேர்.

error: Content is protected !!