News May 13, 2024

ரயிலில் ஏறும்போது தவறி விழுந்த மாணவன்

image

எண்ணூர் பகுதியை சேர்ந்தவர் ஹம்மது நபில். 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற இவர் இன்று காலை ஆவடியில் உள்ள கல்லூரியில் சேர்வதற்கு விண்ணப்பம் வாங்க எண்ணூர் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது ரயிலில் ஏற முயன்ற ஹம்மது நபில் எதிர்பாராதவிதமாக ரயிலிலிருந்து தவறி விழுந்து தலையில் படுகாயம் அடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News July 6, 2025

பழமையான சக்தி வாய்ந்த கோயில்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்கோட்டையில் பாபஹரேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் தொன்மையானது. இந்த கோயிலுக்கு வந்து சிவா பெருமாளை மனதார தரிசிப்பதின் வழியே வீட்டில் இருக்கும் வறுமை நீங்கி, செல்வம் பெருகும் பக்தர்களின் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. மேலும் குடும்பத்தில் உள்ள பிரச்னைகள் தீர்ந்து போதும் என்பது ஐதீகம். கஷ்டத்தில் உள்ள நண்பர்களுக்கு பகிரவும்.

News July 6, 2025

திருவள்ளூர் சர்வபள்ளி ராதா கிருஷ்ணன் சிலை அமைக்க ஆய்வு

image

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சட்டமன்ற தொகுதியில், முன்னாள் குடியரசுத் தலைவரும் கல்வியாளருமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணர்களின் ஒருவர் சிலை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டாக்டர் ராதாகிருஷ்ணன் நடுநிலைப் பள்ளியையும், அறிஞர் அண்ணா பழைய பேருந்து நிலையத்தை அமைச்சர் நாசர் அவர்களும், மாவட்ட ஆட்சியாளர் திரு பிரதாப் அவர்களும் பார்வையிட்டனர்.

News July 6, 2025

திருவள்ளூர் உழவர் சந்தையின் காய்கறி விலை நிலவரம்

image

திருவள்ளூர் உழவர் சந்தையின் இன்று (ஜூலை 06) காய்கறி விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, (1 கிலோ) தக்காளி ரூ.35, உருளை ரூ.35, பீர்க்கங்காய் ரூ.45, புடலங்காய் ரூ.50, அவரைக்காய் ரூ.60, பச்சை மிளகாய் ரூ.40, வெண்டைக்காய் ரூ.50, சுரைக்காய் ரூ.45, பெரிய வெங்காயம் ரூ.30, பாகற்காய் ரூ.50, கத்திரிக்காய் ரூ.40, முருங்கைக்காய் ரூ.60, வாழைப்பழம் ரூ.45, தேங்காய் ரூ.60க்கு விற்பனை செய்யப்பட்டது

error: Content is protected !!