News January 9, 2025
ரயிலில் இளைஞர் கைது – நடந்தது என்ன?

புதுச்சேரி ஒதியன்சாலை போலீசார் மற்றும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா், புதுச்சேரி ரயில் நிலையத்தில் அங்கு வந்த புவனேசுவரம் – புதுச்சேரி விரைவு ரயிலில் நேற்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, ரயிலில் பயணித்த வெளி மாநில இளைஞா் ஒருவா், பையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை வைத்திருந்த உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த சுல்தான் அகமதுவை கைது செய்தனர்.
Similar News
News September 11, 2025
புதுவை: சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு தகவல்

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கடந்த 15 ஆம் தேதி சுதந்திர தின விழா அறிவிப்பில் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு, இண்டக்சன் ஸ்டவ் மற்றும் குக்கர் அன்பளிப்பாக வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பை ஒட்டி வருகின்ற அக்டோபர் 15ஆம் தேதிக்குள் சுதந்திரப் போராட்டத் தியாகிகளோ அல்லது அவருடைய வாரிசுகளோ பென்ஷன் அடையாள அட்டை காட்டி இலவச அன்பளிப்பை பெற்றுக் கொள்ளலாம் என்று ஆட்சியர் தெரிவித்தார்.
News September 11, 2025
புதுவை: கிராம நிர்வாக அதிகாரி பதவிகளுக்கான தேர்வு தேதி

புதுவை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் காலியாக உள்ள கிராம நிர்வாக அதிகாரி பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு (21.09.2025) அன்று புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பகுதிகளில் 86 தேர்வு மையங்களில் நடைபெறவுள்ளது. அனுமதி சீட்டை, தேர்வர்கள் https://recruitment.py.gov.in இணையதளத்தில் இன்று பதிவிறக்கம் செய்யலாம் என்று அரசு செயலர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். SHARE பண்ணுங்க!
News September 11, 2025
புதுச்சேரி: அரசு சார்பில் குடியிருப்பு வசதி ஆணை

புதுச்சேரி அரசு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் காமராஜர் நகர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 13 குடும்பங்களுக்கு குடியிருப்பு வசதி ஒதுக்கீடு செய்து அதற்கான ஆணையினை புதுச்சேரி மாநில வீட்டுவசதி அமைச்சர் திருமுருகன் மற்றும் அமைச்சர் ஜான்குமார் ஆகியோரின் முன்னிலையில் புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி அவர்களால் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.