News May 25, 2024

ரயிலில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள சு.ஒகையூர் கிராமத்தில் உள்ள திரெளபதி அம்மன் திருக்கோயில் அருகே இன்று சென்றுகொண்டிருந்த ரயிலில் இருந்து அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து உயிரிழந்தவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News August 27, 2025

இந்த விநாயகர் சதுர்த்தியை way2news உடன் கொண்டாடுங்கள்

image

உங்கள் பகுதியில் வைத்திருக்கும் வண்ண வண்ண விநாயகர் சிலையை ஊர் அறிய செய்ய அருமையான வாய்ப்பு. அலங்கரித்து வைப்பட்டுள்ள விநாயகர் சிலையை தெளிவாக புகைப்படம் எடுத்து நம்ம way2newsல் பதிவிடுங்கள். எப்படி பதிவிடுவது என்பதை இங்கே <>கிளிக் <<>>செய்து தெரிந்து கொள்ளலாம். எந்த ஊர், என்ன பூஜை, என்ன படையல் உள்ளிட்ட விவரங்களோடு செய்தியாக பதிவிடுங்கள். அனைவருக்கும் இனிய விநாயர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.

News August 26, 2025

கள்ளக்குறிச்சி: தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

image

கள்ளக்குறிச்சியில் மாவட்ட வேலை வாய்ப்பு தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 29ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடைபெறும் முகாமில் விருப்பமுள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளம் வழியாக பதிவு செய்து கலந்து கொள்ளலாம்.த னியார் துறையில் வேலை பெறுபவர்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 26, 2025

கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனை கூடம் நிலவரம்

image

கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று (ஆகஸ்ட் 26) வெளியிடப்பட்ட விலை நிலவரப்படி, எள் அதிகபட்சமாக ₹8,500க்கும், மக்காச்சோளம் ₹2,369க்கும், மணிலா ₹7,930க்கும் விற்பனையானது. இந்த விலை உயர்வு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் அவர்களுக்கு நல்ல லாபம் கிடைத்திருப்பது உறுதியாகியுள்ளது.

error: Content is protected !!