News December 6, 2025

ரயிலில் இதை செய்தால் 5 ஆண்டுகள் சிறை.. Must Read

image

ரயிலில் பயணிக்கும் போது வாட்டர் கெட்டிலை பயன்படுத்தக்கூடாது என RPF எச்சரித்துள்ளது. ஏனென்றால், குறைந்த மின்னழுத்தம் கொண்ட சார்ஜிங் பாயிண்டில் இதுபோன்ற மின் சாதனங்களை பயன்படுத்தினார் உயர் மின்னழுத்தம் ஏற்பட்டு எதிர்பாராத அசம்பாவிதங்கள் ஏற்படலாம். இந்நிலையில் ரயில்களில் கெட்டில் பயன்படுத்தினால் ₹1,000 அபராதம் (அ) 5 ஆண்டுகள் சிறை தண்டனை (அ) இரண்டுமே விதிக்கப்படும் என RPF தெரிவித்துள்ளது.

Similar News

News December 6, 2025

படத்திற்கு சான்றளிக்கும் குழுக்களில் 50% பெண்கள்!

image

பாலின சமத்துவத்தை வலுப்படுத்தும் நோக்கில், சென்சார் போர்டில் தணிக்கை மற்றும் மறுஆய்வு குழுக்களில், 50% பெண்கள் இடம்பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் (CBFC) இதை உறுதி செய்துள்ளதாக தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். மாநிலங்களவையில் பதிலளித்த அவர், படங்களுக்கு சான்றளிக்கும் பணிகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

News December 6, 2025

திமுகவுக்கு 90, தவெகவுக்கு 70.. உளவுத்துறை SURVEY

image

கரூர் துயருக்கு பிறகு, மத்திய உளவுத்துறை எடுத்த சர்வேயில், தவெகவுக்கு 70 இடங்களில் வெற்றி வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், திமுக கூட்டணி 90, அதிமுக – பாஜக கூட்டணி 35, நாதக 1 இடங்களில் முன்னிலை வகிப்பதாக சொல்லப்படுகிறது. மீதமுள்ள 38 தொகுதிகளில் இழுபறி நீடிக்கிறது. குறிப்பாக, வட, தென் மாவட்டங்களில் தவெகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக சர்வே தெரிவிக்கிறதாம். உங்கள் கருத்து என்ன?

News December 6, 2025

TN அரசில் வேலை: 1,100 காலியிடங்கள், ₹56,100 சம்பளம்!

image

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ➤காலியிடங்கள்: 1100 Assistant Surgeon (General) ➤வயது : 18 – 37 வரை ➤கல்வித்தகுதி: MBBS ➤தேர்ச்சி முறை: கணினி தேர்வு ➤சம்பளம்: ₹56,100 – ₹2,05,700 விண்ணப்பிக்க கடைசி நாள்: டிச.11 ➤முழு விவரங்களுக்கு இங்கே <>கிளிக்<<>> செய்யவும். வேலை தேடும் அனைத்து நண்பர்களுக்கும் SHARE THIS.

error: Content is protected !!