News March 20, 2026

ரம்ஜான் விடுமுறை.. 3 நாள்கள் சிறப்பு பஸ்கள் அறிவிப்பு

image

நாளை ரம்ஜான் விடுமுறையையொட்டி, மக்கள் சிரமமின்றி ஊர்களுக்கு செல்ல ஏதுவாக இன்று முதல் 3 நாள்களுக்கு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட்டு வருகின்றன. TNSTC செயலி (அ) இணையதளம் மூலம் இப்போதே டிக்கெட் புக் செய்து நெரிசலின்றி பயணம் செய்யுங்கள். SHARE IT

Similar News

News March 29, 2026

BREAKING: திமுக கூட்டணியில் இணைந்தார்

image

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிந்து, வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில், மேலும் ஒரு கட்சி இணைந்துள்ளது. தமிழக முன்னேற்றக் கழகத்தின் தலைவர் செங்கம் கு.ராஜாராம், திமுக கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளார். மேலும், கட்சி நிர்வாகிகளுடன் அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் சந்தித்து, நிபந்தனையற்ற ஆதரவுக் கடிதத்தையும் அவர் வழங்கியுள்ளார்.

News March 29, 2026

3 நாள்கள் விடுமுறை.. புதிய அறிவிப்பு வெளியானது

image

ஏப்ரல் மாத வங்கி விடுமுறை நாள்களை RBI வெளியிட்டுள்ளது. அதன்படி, ஏப்.5, 12, 19, 26 ஆகிய 4 ஞாயிற்றுக்கிழமைகள், ஏப்.11, 25 ஆகிய 2-வது, 4-வது சனிக்கிழமைகளில் வழக்கம்போல் விடுமுறையாகும். இதை தவிர, ஏப்.1 வருடாந்தர கணக்கு முடிப்பு, ஏப்.3 புனித வெள்ளி காரணமாக வங்கிகள் செயல்படாது. அதேபோல், ஏப்.14 தமிழ் புத்தாண்டிற்கும் லீவுதான். இதனால், காசோலை டெபாசிட் உள்ளிட்ட பணிகளை முன்கூட்டியே திட்டமிடுங்கள். SHARE IT

News March 29, 2026

வாட்டும் வெயிலுக்கு நடுவில் மழைக்கு வாய்ப்பு: IMD

image

தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் வரும் நாட்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக IMD கணித்துள்ளது. அதன்படி இன்று முதல் ஏப். 4-ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும், தென் தமிழக கடலோர மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!