News April 11, 2024
ரம்ஜான் வாழ்த்து தெரிவித்த ஏ.சி சண்முகம்

வேலூர் மாவட்டம், ஹுசைன் புரா மசூதியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேலூர் பாராளுமன்ற வேட்பாளரும், புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் இஸ்லாமிய சகோதரர்களுடன் ரமலான் பண்டிகையை கொண்டாடி வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டார். மேலும் அங்கிருந்த இஸ்லாமியர்களுக்கு தனது ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.
Similar News
News April 19, 2025
17 வயது சிறுமி கர்ப்பம்: வாலிபர் கைது

வேலூர் மாவட்டம் சம்பத் நகரைச் சேர்ந்தவர் தனுஷ் (20). இவர் 17 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கர்ப்பமடைந்த சிறுமி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு சென்றபோது, அவரின் ஆதார் அட்டையை பார்த்த டாக்டர்கள் சிறுமிக்கு 18 வயது நிரம்பாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மகளிர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தனுஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News April 19, 2025
வேலூர் காவல் துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பாக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு வந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று (ஏப்ரல் 18) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
News April 18, 2025
வேலூர் மாவட்டத்தில் 101 மது பாட்டில்கள் பறிமுதல்

வேலூர் மாவட்டம் முழுவதும் இன்று (ஏப்ரல் 18) காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில், 101 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு 3 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் எச்சரித்துள்ளார்.