News March 22, 2025
ரம்ஜான் பண்டிகையை ஒட்டி சிறப்பு ரயில்

ரம்ஜான் பண்டிகையையொட்டி கோவை-சென்னை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இது மார்ச் 30ம் தேதி இரவு 11.20 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு திருப்பூர், ஈரோடு, சேலம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக, மறுநாள் காலை 8 மணிக்கு போத்தனூர் ரயில் நிலையத்தை வந்தடைகிறது. அதேபோல் மார்ச் 31-ம் தேதி இரவு 11.30 மணிக்கு போத்தனூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 8.20 மணிக்கு சென்னை சென்றடைகிறது.
Similar News
News March 24, 2025
கோவையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் குற்ற செயல்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் இன்று கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்டங்களிலும் 1 உதவி ஆய்வாளர் 3 காவலர்கள் கொண்ட குழுவாக துப்பாக்கி ஏந்திய காவலர்கள் கண்காணிப்பு பணியில் இன்று ஈடுபட்டுள்ளனர். மேலும் சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
News March 24, 2025
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (23.03.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News March 23, 2025
ரயில் பயணிகள் கவனத்திற்கு

சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள நேற்று விடுத்த செய்திக்குறிப்பில், திருவனந்தபுரத்தில் இருந்து மாா்ச்28, ஏப்.4- வெள்ளியன்று புறப்பட்டு சிறப்பு ரயில் ஞாயிறன்று ஷாலிமார் நிலையத்தை சென்றடையும். மறு மாா்க்கத்தில் மாா்.31, ஏப்.7 திங்களன்று ஷாலிமாரில் புறப்பட்டு புதனன்று திருவனந்தபுரம் சென்றடையும். இந்த ரயில் கோவை வழியாக இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.