News March 20, 2025
ரம்ஜான்- சேலம் வழியாக சிறப்பு ரயில் அறிவிப்பு

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, வரும் மார்ச் 30- ஆம் தேதி சேலம் வழியாக சென்னை சென்ட்ரலில் இருந்து போத்தனூருக்கும், மறுமார்க்கத்தில், மார்ச் 31- ஆம் தேதி போத்தனூரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில்கள், சேலம் ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நின்றுச் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 21, 2025
குழந்தை திருமணம்: கலெக்டர் எச்சரிக்கை

குழந்தை திருமணம் நடைபெறுவது கண்டறியப்பட்டால் அதற்கான ஏற்பாடுகளை செய்தவர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதத்துடன் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என கலெக்டர் ரா.பிருந்தாதேவி எச்சரித்துள்ளார். மேலும், விவரங்களுக்கு மாவட்ட குழந்தைகள் நலக் குழு கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரையை 99409-91160 என்ற கைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 20, 2025
சேலம்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் போது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று மார்ச்.20 இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
News March 20, 2025
சேலம் மாநகரில் இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் மாநகரில் இன்று(20.3.25) இரவு 11 முதல் காலை 6 மணி வரை சேலம் டவுன், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, அஸ்தம்பட்டி ஆகிய உட் கோட்டாவில் இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் காவலரின் விவரங்கள் மேலே குறிப்பிட்டுள்ள புகைப்படத்தில் உள்ளது. பொதுமக்கள் தங்களது அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்தில் அழைக்கலாம். தொடர்பு எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன