News December 6, 2024
ரப்பர் உற்பத்தியில் இந்தியா 3வது இடம்: மாநாட்டில் தகவல்

இந்தியாவில் 6.40 லட்சம் டன் ரப்பர் உற்பத்தி செய்யப்படுகிறது. இயற்கை ரப்பர் உற்பத்தியில் இந்தியா 3வது இடத்திலும், தாய்லாந்து 26 லட்சத்து 15 ஆயிரம் டன் உற்பத்தியுடன் முதலிடத்திலும், இந்தோனேசியா 2வது இடத்திலும் உள்ளது. இந்தியாவில், கேரள மாநிலத்தில் 85% ரப்பரும், தமிழ்நாட்டில் 4% ரப்பரும் உற்பத்தி செய்யப்படுவதாக குலசேகரத்தில் நேற்று(டிச.,6) நடைபெற்ற ரப்பர் விவசாயிகள் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.
Similar News
News September 18, 2025
குமரி: காதலிக்காக மூதாட்டியிடம் நகை பறிப்பு

பள்ளியாடி ஜெபனேசரின் தாயார் ரெஜி(63) 2 நாட்களுக்கு முன்பு கழிவறையில் மயங்கி விழுந்தார். அவரது கழுத்திலிருந்த 11 பவுன் நகை திருடப்பட்டிருந்தது. தக்கலை போலீசார் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து திருவட்டாரை சேர்ந்த ஆனந்த்(26) என்பவரை உண்ணாமலைக்கடையில் நேற்று கைது செய்தனர். இஞ்சினியரான ஆனந்த் வேலை கிடைக்காததால் பெயிண்டிங் வேலை பார்த்ததாகவும்,காதலிக்காக நகை பறித்ததாகவும் போலீசிடம் தெரிவித்துள்ளார்.
News September 18, 2025
குமரி: நடு ரோட்டில் பழுதாகி நின்ற லாரி

நாகர்கோவில் சவேரியார் சந்திப்பில் இருந்து செட்டிகுளம் செல்லும் பாதையில் லாரி ஒன்று நேற்று திடீரென்று பழுதடைந்ததால் லாரியை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். பின்னர் பழுதடைந்த லாரி கிரேன் மூலம் எடுத்து அப்புறப்படுத்தப்பட்டது.இதனால் அந்தப் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
News September 18, 2025
குமரி: உங்க ரேஷன் கார்டடை CHECK பண்ணுங்க…

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
1.AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
2.PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
3.NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்.
4.NPHH: சில பொருட்கள் மட்டும்.உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய இங்கு <