News January 30, 2026
ரன்வீர் சிங் மீது வழக்குப்பதிவு!

கடவுளை கேலி செய்த விவகாரத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மீது பெங்களூரு போலீஸ் FIR பதிவு செய்துள்ளது. கோவாவில் கடந்தாண்டு இந்திய சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது. அதன் நிறைவு விழாவில் பங்கேற்ற பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், காந்தாரா படத்தில் வரும் தெய்வ கதாபாத்திரத்தின் முகபாவனைகளை செய்து காண்பித்தது சர்ச்சையானது. இதுகுறித்து அவர் மன்னிப்பு கேட்ட நிலையில், தற்போது FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News February 7, 2026
பரோட்டா சாப்பிட்டால் கேன்சர் வரும்!

இந்தியாவில் பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கு மைதா நிறைந்த உணவுகளை சாப்பிடுவதும் முக்கிய காரணம் என டாக்டர்கள் குறிப்பிடுகின்றனர். மைதா கொண்டு தயாரிக்கப்படும் பீட்சா, பரோட்டா, பர்கர் ஆகிய உணவுகளை அதிகளவு சாப்பிடுவதால் இளம்தலைமுறை பெருங்குடல் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாவதாக கூறப்படுகிறது. எனவே, பரோட்டாவை அளவாக சாப்பிடவும்.
News February 7, 2026
அக்னி 3 சோதனை வெற்றி.. இந்தியா சாதனை

ஒடிசாவின் சந்திப்பூர் தளத்தில் அக்னி 3 ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லக்கூடிய இந்த ஏவுகணை, கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சுமார் 3,500 கி.மீ தொலை தூர இலக்குகளையும் துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது. இது இந்திய வான்வழி பாதுகாப்புக்கு கூடுதல் வலிமை சேர்க்கும் எனக் கூறப்படுகிறது. இதற்கு ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
News February 7, 2026
பிப்ரவரி 7: வரலாற்றில் இன்று

*1864-மறைந்த மெட்ராஸ் மாகாண நீதிபதி சிவசுவாமி பிறந்தநாள் *1902–தமிழறிஞர் தேவநேயப் பாவாணர் பிறந்தநாள் *1979–நெப்டியூனின் சுற்றுப்பாதைக்குள் நுழைந்தது புளூட்டோ *1986–அரசியல்வாதி ஏ.ஜி.சுப்புராமன் நினைவு நாள் *1992–ஐரோப்பிய ஒன்றியம் அமைப்பதற்கான மாஸ்ட்ரிக்ட் ஒப்பந்தம் கையெழுத்து *2001–எழுத்தாளர் பகீரதன் நினைவு நாள் *2008–நடிகர் குணால் நினைவு நாள்


