News December 5, 2025

ரத்தன் டாடாவின் வளர்ப்பு தாயார் காலமானார்

image

ரத்தன் டாடாவின் வளர்ப்பு தயார் சிமோன் டாடா (95) உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட அவர், கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஜெனிவாவில் பிறந்த சிமோன், 1955-ல் நாவல் டாடாவை திருமணம் செய்தார். Lakmé, Trent Ltd உள்ளிட்ட பிராண்ட் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றியவர். #RIP

Similar News

News December 5, 2025

இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.. மத்திய அரசு முடிவு

image

மக்களின் துல்லியமான லொகேஷனை (A-GPS) எப்போதும் On செய்து வைத்திருப்பதை ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் கட்டாயமாக்க வேண்டும் என்ற யோசனையை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. தற்போது, டவர் சிக்னல் படி தோராயமான லொகேஷனையே பெற முடிவதால், புலனாய்வு அமைப்புகளின் விசாரணையில் தொய்வு ஏற்படுவதாக கூறப்படுகிறது. ஆனால், இது மக்களின் தனியுரிமையை பாதிக்கும் என ஆப்பிள், கூகுள், சாம்சங் நிறுவனங்கள் எதிர்க்கின்றன.

News December 5, 2025

இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டிய தமிழக அரசு

image

டிட்வா புயல் வெள்ளத்தால் இலங்கையில் இதுவரை 465 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அரிசி, பால் பவுடர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை தமிழக அரசு இலங்கைக்கு அனுப்பவுள்ளது. இதன்பொருட்டு, இலங்கைக்கு நிவாரண பொருள்களுடன் செல்லும் கப்பலை, நாளை சென்னை துறைமுகத்தில் CM ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைக்கவுள்ளார்.

News December 5, 2025

2-ம் நாளாக ஏற்றம்.. குஷியில் முதலீட்டாளர்கள்

image

தொடர்ந்து 4 நாள்களாக சரிந்த இந்திய பங்குச்சந்தைகள் நேற்று முதல் ஏற்றத்தை கண்டுள்ளன. RBI-ன் <<18475076>>ரெப்போ வட்டி குறைப்பு<<>>, இன்றைய ஏற்றத்திற்கு வலு சேர்த்துள்ளது. அதன்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 447 புள்ளிகள் உயர்ந்து, 85,712 புள்ளிகளுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 153 புள்ளிகள் உயர்ந்து 26,186 புள்ளிகளுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன.

error: Content is protected !!