News November 13, 2024

ரத்ததான முகாம் நடத்தியவர்களுக்கு பாராட்டு

image

ஊட்டியில் தன்னார்வ ரத்ததான முகாம்களை சிறப்பாக நடத்தி, தேவைப்படும் நோயாளிகளுக்கு இரத்தம் அளித்த 20 ஒருங்கிணைப்பாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன. இதை நீவகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு வழங்கினார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், ஊட்டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் கீதாஞ்சலி பங்கேற்றனர்.

Similar News

News November 19, 2024

நீலகிரி மாவட்டத்தில் கிராமசபை கூட்டம்

image

நீலகிரி மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் வரும் 23 தேதி உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. அந்தந்த ஊராட்சி தலைவர்கள் தலைமையில் நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன். இந்த தகவலை நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பாவியா தெரிவித்துள்ளார்.

News November 19, 2024

நீலகிரிகாரருக்கு அரசின் வெள்ளி பதக்கம்

image

தனது இரண்டு மகன்களையும் ராணுவத்திற்கு அனுப்பிய நீலகிரியைச் சேர்ந்த போஜன் என்பவருக்கு தமிழ்நாடு அரசின் 12 கிராம் எடையிலான வெள்ளி பதக்கம் வழங்கப்பட்டது. நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இந்தப் பதக்கமும் ராணுவ பணி ஊக்க மானியமாக ரூபாய் 25 ஆயிரம் பெறுவதற்கான அனுமதி ஆணையையும் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு வழங்கினார்.

News November 19, 2024

நீலகிரியில் 6 குரங்குகள் பலி: மின்னல் தான் காரணமா?

image

கோத்தகிரி டான்பஸ்கோ சாலையில் உள்ள பள்ளி வளாகத்தில் ஒரே இடத்தில் 6 குரங்குகள் விழுந்து உயிரிழந்துள்ளன. தகவல் அறிந்த வனத்துறையினர் அவைகளை மீட்டு பிரேத பரிசோதனை செய்தனர். இவை மின்னல் தாக்கி பலியானதாக சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து ரேஞ்சர் செல்வராஜ் கூறுகையில், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே எதுவும் சொல்ல முடியும் என்றார்.