News January 2, 2026

‘ரஜினி 173’ இயக்குநர் யார்? நாளை விடைதரும் RKFI

image

கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் ‘ரஜினி 173’ படம் உருவாக உள்ளது. இந்த படத்தில் இருந்து சுந்தர் சி விலகிய பின், படம் குறித்த எந்த அப்டேட்டையும் படக்குழு வெளியிடவில்லை. இதனிடையே படத்தை யார் இயக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்தது. இந்நிலையில் நாளை காலை 11 மணிக்கு ரஜினி 173 குறித்த அறிவிப்பு வெளியாகும் என ராஜ்கமல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Similar News

News February 1, 2026

மதுரை: இலவச சமையல் சிலிண்டர் பெறுவது எப்படி?

image

1.இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற ‘<>இங்கே கிளிக்<<>>’ செய்து தங்களுக்கு விருப்பமான கேஸ் நிறுவனத்தைத் (Indane/Bharat/HP) தேர்வு செய்யவும்
2.பெயர்,மொபைல் எண் விவரங்களை உள்ளிட்டு ‘Register ‘ செய்ய வேண்டும்
3.ஆன்லைன் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணபத்தை அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் ஒப்படைக்க வேண்டும்
4. விவரங்களுக்கு 1800-233-3555, 1800-266-6696 அழைக்கவும்.ஷேர் பண்ணுங்க

News February 1, 2026

அதிமுகவில் அடுத்தடுத்து இணைந்தனர்.. CM அதிர்ச்சி

image

தேர்தல் நெருங்கும் நிலையில் மாற்றுக்கட்சியினரை இணைக்கும் பணியில் பிரதான கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் திமுக, OPS ஆதரவாளர்கள், நாதக போன்ற கட்சிகளில் இருந்து 2,000-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்துள்ளனர். குறிப்பாக, இந்த கட்சி மாற்றம் கொங்கு மண்டலத்தில் நடப்பதால், அப்பகுதியை கைப்பற்ற வியூகம் வகுக்கும் CM ஸ்டாலினுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

News February 1, 2026

குழந்தைகளின் நேரத்தை திருடும் ஸ்மார்ட் போன்

image

குழந்தைகளின் ஸ்மார்ட் போன் பயன்பாடு குறித்து சமீபத்தில் வெளியான ஆய்வு அதிர்ச்சி அளிக்கிறது. அதன்படி 14- 16 வயதான 76% குழந்தைகள் ஸ்மார்ட் போனை பயன்படுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ரீல்ஸ், கேமிங், சாட்டிங் என தினந்தோறும் 3- முதல் 6 மணி நேரத்தை செல்போனில் செலவிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அவர்களின் தூக்கம், சிந்தனை திறன், மனவலிமை உள்ளிட்டவற்றை பாதிக்கும் எனவும் கூறப்படுகிறது.

error: Content is protected !!