News November 22, 2025

ரஜினி படத்துக்கு புது இயக்குநரை பிடித்தாரா கமல்?

image

ரஜினி படத்துக்கு கதை சொல்ல புது இயக்குநர்களும் முன்வரலாம் என கமல் கூறியிருந்தார். இந்நிலையில், மலையாள இயக்குநர் ஒருவர் RKFI அலுவலகத்தை அணுகியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த புது இயக்குநரின் கதையோடு சேர்த்து மொத்தம் 5 கதைகள் வரிசையில் இருக்கிறதாம். இதில் ஒன்றை ரஜினி ஓகே செய்ததும், டிசம்பர் முதல் வாரம் இயக்குநர் அறிவிப்பு வெளியாகும் எனவும், மார்ச்சில் ஷூட்டிங் தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.

Similar News

News February 13, 2026

தவெகவில் இணையும் Ex அமைச்சர்.. ஓபிஎஸ் அதிர்ச்சி

image

கூட்டணி விவகாரத்தில் OPS-ன் இந்த தொடர் மவுனம் அவரது ஆதரவாளர்கள் மத்தியிலேயே ஒருவித தவிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்குமேல் ஓபிஎஸ்ஸுடன் இருந்தால் ஒன்றும் ஆகாது என நினைக்கும் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் செங்கோட்டையன் மூலம் தவெகவிற்கு சென்று விடலாமா என்று தங்களது ஆதரவாளர்களுடன் ஆலோசனை செய்கிறார்களாம். இதையறிந்த OPS, தற்போது சமதானம் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளாராம்.

News February 13, 2026

CINEMA 360°: ‘பிரேமம்’ இன்று ரீ-ரிலீஸ்

image

மிகப்பெரிய ஹிட் அடித்த ‘பிரேமம்’, டி.ராஜேந்தரின் உயிருள்ளவரை உஷா ஆகிய திரைப்படங்கள் காதலர் தினத்தை முன்னிட்டு இன்று ரீ-ரிலீஸ் ஆகிறது. நானியின் ‘தி பாரடைஸ்’ திரைப்படம் மார்ச் 26-ம் தேதி வெளியாகிறது. அதர்வா முரளி நடிக்கும் ‘இதயம் முரளி’ திரைப்படத்தில் பகத் பாசில் நடித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ரஜினி- கமல் இணைந்து நடிக்கும் படத்தை இன்பநிதி தயாரிப்பதாக கூறப்படுகிறது.

News February 13, 2026

இன்றைய நல்ல நேரம்

image

▶பிப்ரவரி 13, மாசி 1 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 5:00 PM – 6:00 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:30 AM – 1:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶குளிகை: 7:30 AM – 9:00 PM ▶திதி: ஏகாதசி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்

error: Content is protected !!