News November 15, 2025
ரஜினி படத்தில் இருந்து சுந்தர் சி வெளியேற இதுதான் காரணமா?

‘ரஜினி 174’ படத்தில் இருந்து <<18275475>>சுந்தர் சி<<>> வெளியேறியதற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ரஜினிக்கு ஒரு ஜாலியான பேய் கதையை சுந்தர் சி கூறியுள்ளாராம். கதை பிடித்துபோன ரஜினி, திரைக்கதையில் சில மாற்றங்களை செய்ய சொல்லி கூறியிருக்கிறாராம். மாற்றங்களை செய்தாலும், அடிக்கடி கரெக்ஷன் சொன்னதால் கடுப்பான சுந்தர் சி, யாரிடமும் சொல்லாமல், படத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துவிட்டாராம்.
Similar News
News November 15, 2025
உலகில் டாப் 10 சிறந்த காலை உணவு

மனிதர்களுக்கு காலை உணவு என்பது இன்றியமையாதது. ஒருநாளைக்கு உடலுக்கு தேவைப்படும் ஆற்றலின் மூலமாக காலை உணவு உள்ளது. அந்தவகையில், உலகின் சிறந்த காலை உணவு 2025 பட்டியலை TasteAtlas வெளியிட்டுள்ளது. இதில் எந்தெந்த நாடுகள் டாப் 10 இடத்தை பிடித்துள்ள என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE பண்ணுங்க.
News November 15, 2025
Sports Roundup: KKR பவுலிங் கோச்சானார் டிம் சௌதி

*SA-க்கு எதிரான முதல் டெஸ்ட்டின் 2-ம் நாள் ஆட்டத்தை, இந்தியா 37/1 ரன்களுடன் இன்று தொடங்குகிறது. *ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு. *உலக செஸ் சாம்பியன்ஷிப்பில், USA வீரருக்கு எதிரான போட்டியை இந்திய வீரர் அர்ஜுன் டிரா செய்தார். *ஃபிபா உலகக்கோப்பை தகுதி சுற்றில் ரொனால்டோவுக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது. *KKR பவுலிங் கோச்சாக டிம் சௌதி நியமனம்
News November 15, 2025
20-ம் தேதி வரை மழை வெளுக்கும்

தென் இலங்கை மற்றும் அதனை ஒட்டி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக IMD தெரிவித்துள்ளது. அதன்காரணமாக, தமிழத்தில் வரும் 20-ம் தேதி வரை மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அடுத்த 3 நாள்களில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. உங்கள் ஊரில் மழை பெய்கிறதா? கமெண்ட் பண்ணுங்க.


