News March 12, 2026
ரஜினியை மிரட்டியது திமுக: ஆதவ் அர்ஜுனா

ரஜினி அரசியல் கட்சி தொடங்காததற்கு திமுகவே காரணம் என ஆதவ் அர்ஜுனா பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார். திமுக விடுத்த மிரட்டலால் தான் ரஜினி மனவலிமை இழந்து பின்வாங்கியதாக குறிப்பிட்ட அவர், விஜய் திமுகவை எதிர்த்து நிற்கிறார் என்றால் அவருக்கு மன வலிமை அதிகம் எனவும் பேசியுள்ளார். முன்னதாக, உடல்நிலை காரணமாக அரசியலுக்கு வரவில்லை என ரஜினி கூறியது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 29, 2026
இலங்கைக்கு எரிபொருள் உதவி செய்த இந்தியா

மேற்காசிய போரால் இலங்கையில் கடுமையான எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இலங்கையின் எரிபொருள் தட்டுப்பாடு குறித்து சில நாள்கள் முன்பு PM மோடியிடம் இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க பேசியிருந்தார். இதன் பலனாக 38,000 மெட்ரிக் டன் எரிபொருளை இலங்கைக்கு இந்தியா அனுப்பியுள்ளது. இதனையடுத்து, இந்தியாவின் உதவிக்கு PM மோடி, EAM ஜெய்சங்கருக்கு இலங்கை அதிபர் நன்றி கூறியுள்ளார்.
News March 29, 2026
திமுக, அதிமுகவை நேரடியாக எதிர்த்து போட்டியிடும் விஜய்

2011-ல் உருவாக்கப்பட்ட திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் போட்டியிடுகிறார். இத்தொகுதியில் 2021, 2016-ல் அதிமுகவும், 2021-ல் திமுகவும் வெற்றிபெற்றன. தற்போது சிட்டிங் எம்எல்ஏ இனிகோ இருதயராஜ், அதிமுகவின் ராஜசேகரன் களத்தில் உள்ளனர். சிறுபான்மை மக்கள் அதிகமுள்ள இத்தொகுதியில் திமுக, அதிமுக வேட்பாளர்களை விஜய் நேரடியாக எதிர்த்து களமிறங்குகிறார். <<-se>>#TNElection2026<<>>
News March 29, 2026
போர்.. டிரம்ப் பரபரப்பு அறிவிப்பு

ஈரான் – இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை என டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானில் மேலும் 3,554 இலக்குகளை தாக்க வேண்டி இருப்பதாகவும், அவை மிக விரைவில் செய்து முடிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, ஹார்முஸ் நீரிணையை கிண்டலாக டிரம்ப் நீரிணை என குறிப்பிட்ட அவர், அமெரிக்காவுக்கு நேட்டோ நாடுகள் ஆதரவாக நிற்கவில்லை எனவும் சாடியுள்ளார்.


