News December 30, 2025
ரஜினியின் லிஸ்ட்டில் அஸ்வத் மாரிமுத்து?

சுந்தர்.சி வெளியேறி நிலையில், கமல் தயாரிப்பில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இந்நிலையில், ‘டிராகன்’ அஸ்வத் மாரிமுத்து ரஜினியிடம் கதை ஒன்றை கூறினாராம். அது அவருக்கு மிகவும் பிடித்து போக, அக்கதையில், கமலின் RKFI தயாரிப்பில் நடிக்க முடிவெடுத்து விட்டதாக கூறப்படுகிறது.
Similar News
News January 9, 2026
BREAKING: யாருடன் கூட்டணி.. முடிவை சொன்ன பிரேமலதா

யாருடன் கூட்டணி என்பது குறித்து முடிவெடுத்துவிட்டேன் என்று கடலூர் மாநாட்டில் பிரேமலதா தெரிவித்துள்ளார். இதுவரை எந்த கட்சியும் கூட்டணியை அறிவிக்கவில்லை. அப்படி இருக்கையில், தேமுதிக மட்டும் கூட்டணி அறிவிப்பை இன்றே வெளியிட வேண்டுமா என தொண்டர்களிடம் அவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பலரும், வேண்டாம்! வேண்டாம் ! என முழக்கம் எழுப்பினர். உடனே, கூட்டணி குறித்து பின்னர் அறிவிப்பதாக சஸ்பென்ஸ் வைத்துள்ளார்.
News January 9, 2026
காணாமல் போன போன், அடுத்து நடந்ததை பாருங்க!

மொபைல் போனை தொலைத்துவிட்டால், அதை மீண்டும் கண்டுபிடிப்பது கடினம் என்றுதான் நினைப்போம். அப்படித்தான், பெங்களூருவில் போனை தொலைத்துவிட்ட கல்லூரி மாணவி ஒருவர், எதற்கும் இருக்கட்டுமே என்று போலீஸின் ‘112’ நம்பருக்கு போன் செய்து புகாரளித்தார். அட, என்ன ஆச்சரியம்! 8 நிமிடத்தில் அங்குவந்த போலீஸ், GPS உதவியுடன் உடனே போனை கண்டுபிடித்து ஒப்படைத்துள்ளனர். ஆகவே, போன் தொலைந்தால் புகார் அளிக்க தயங்காதீர்.
News January 9, 2026
கனமழை: 14 மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு அலர்ட்

நாளை சனிக்கிழமை என்றாலும், பெரும்பாலான மாவட்டங்களில் தனியார் பள்ளிகள் இயங்கும். இந்நிலையில், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகையில் நாளை மிக கனமழையும், திருவள்ளூர், சென்னை, காஞ்சி, செங்கை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், அரியலூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரத்தில் கனமழையும் பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. அதனால், மாணவர்கள் குடை, ரெயின் கோட்டை எடுத்துச் செல்லுங்கள். SHARE IT.


