News November 18, 2025

ரஜினிக்கு பாராட்டு விழா நடத்தும் மத்திய அரசு

image

கோவாவில் வரும் 20 முதல் 28-ம் தேதி வரை, சர்வதேச திரைப்பட விழா நடைபெற உள்ளது. அதில், திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த், தெலுங்கு நடிகர் பாலய்யாவை கவுரவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த பாராட்டுவிழா, வரும் 28-ம் தேதி நடைபெற உள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். முன்னதாக, பாராட்டு விழா நடத்த சிலர் முன் வந்த போது, ரஜினி அதை தவிர்த்துவிட்டார்.

Similar News

News November 18, 2025

கூட்டணியை உறுதி செய்தார்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

image

NR காங்கிரஸ் கட்சி NDA கூட்டணியிலிருந்து விலகுவதாக பேச்சு எழுந்த நிலையில், தற்போது வரை NDA கூட்டணியில் நீடிப்பதாக புதுச்சேரி CM ரங்கசாமி விளக்கம் அளித்துள்ளார். மேலும், 2026 தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூட்டணி நிலைப்பாடு குறித்து அறிவிப்போம் எனவும் சூசகமாக பதில் அளித்துள்ளார். புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து, நிதி ஒதுக்கீடு விவகாரத்தில் BJP மீது அவர் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

திருப்பதி தரிசன புக்கிங் சற்று நேரத்தில் தொடங்குகிறது

image

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் பிப்ரவரி மாதத்திற்கான தரிசன டிக்கெட் புக்கிங் காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இதில் சுப்ரபாதம், தோல் மாலை, அர்ச்சனை, அஷ்டதள பாத பத்மாராதனை சேவைக்கும் புக்கிங் செய்யலாம். இன்று காலை 10 மணி முதல் வரும் 20-ம் தேதி காலை 10 மணி <>ttdevasthanams.ap.gov.in<<>> என்ற இணையதளத்தில் பக்தர்கள் முன்பதிவு செய்யலாம் என TTD அறிவித்துள்ளது.

error: Content is protected !!