News November 13, 2025
ரஜினிகாந்த் வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்!

நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு அடையாளம் தெரியாத நபர் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த வாரத்தில் அவரது வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், சோதனைக்கு பின் அது புரளி எனத் தெரியவந்தது. அண்மைக் காலமாக TN-ல் CM ஸ்டாலின், EPS உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் வீடுகளுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் வந்த வண்ணம் உள்ளன.
Similar News
News March 27, 2026
தவெகவில் இணைந்தனர்.. திமுக கூட்டணி அதிர்ச்சி

திமுக கூட்டணியில் காங்.,க்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அக்கட்சியின் அதிருப்தி நிர்வாகிகள் அடுத்தடுத்து தவெகவில் இணைந்து வருகின்றனர். நேற்று காங்., பொ.செ., டி.செல்வம், கமலம்மாள் (96) ஆகியோர் தவெகவில் இணைந்தனர். மேலும் சில அதிருப்தி காங்., நிர்வாகிகள் தவெகவில் இணையப் போவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இது திமுகவுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளதாம்.
News March 27, 2026
புதுச்சேரியில் விசிகவுக்கு பானை சின்னம் இல்லை

புதுச்சேரியில் தனித்து போட்டியிடும் விசிகவுக்கு பானை சின்னம் கிடைக்கவில்லை. எனவே, ஊசுடு, நெட்டப்பாக்கம் ஆகிய தொகுதிகளில் விசிகவுக்கு வாளி சின்னத்தை ECI ஒதுக்கியுள்ளது. உழவர்கரை தொகுதியில் கரும்பலகை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது திருமாவளவனுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளதாம். ஏப்.9-ல் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை விசிக தீவிரப்படுத்தியுள்ளது.
News March 27, 2026
இது புது டிரெண்ட்.. வைரல் Baby Bump Mehendi!

இந்த போட்டோ தான் SM-ல் பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது. கர்ப்பிணி ஒருவர், வயிற்றில் மெஹந்தி போட்டுக் கொண்டு வளைகாப்பு நிகழ்ச்சிக்கு தயாராகியுள்ளார். இந்த மருதாணி சடங்கும் அழகாக இருப்பதாக பலர் பாராட்டுகின்றனர். அதே நேரத்தில், இதனால் கருவிலுள்ள குழந்தைக்கு ஏதேனும் பிரச்னை ஏற்படுமா என்ற கேள்விகளையும் நெட்டிசன்கள் எழுப்புகின்றனர். இந்த ‘Baby bump mehendi’ பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?


