News February 15, 2025
ரசிகர்களை சந்தித்த ‘விடாமுயற்சி’ படக்குழுவினர்!

நடிகர் அஜித்குமார் நடிப்பில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படத்தை சேலம் அழகாபுரத்தில் உள்ள பிரபல திரையரங்கில் லைகா நிறுவனம் மற்றும் நடிகை ரெஜினா, நடிகர் ஆரவ் ஆகியோர் ரசிகர்களோடு ரசிகர்களாக படத்தைப் பார்த்ததுடன் ரசிகர்களுடன் கலந்துரையாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட அனுபவங்களையும் பகிர்ந்தனர்.
Similar News
News July 6, 2025
2-வது முறையாக 120 அடியை எட்டிய மேட்டூர் அணை!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 2-வது முறையாக 120 அடியை எட்டியுள்ளது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 53,027 கனஅடியில் இருந்து 51,401 கனஅடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 120 அடியாக உயர்ந்துள்ள நிலையில், நீர் இருப்பு 93.47 டி.எம்.சி.யாக உள்ளது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 40,000 கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கனஅடியும் வெளியேற்றப்படுகிறது.
News July 5, 2025
சேலம் மாநகர இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் மாநகரில் இன்று (ஜூலை 05) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ளது. ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர், வாழப்பாடி ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரை புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு மாநகர கட்டுப்பாட்டு எண்: 0427-2273100 அழைக்கலாம்.
News July 5, 2025
‘குற்றங்களுக்கு போதைப்பொருள் உபயோகமே காரணம்’

“சமுதாயத்தில் பெரும்பாலான குற்றங்களுக்கு போதைப்பொருள் உபயோகம் காரணமாக உள்ளது. வழக்கறிஞர்கள் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வாங்கித் தருவதுடன் கொடுமையான குற்றங்கள் மீண்டும் நடக்காமல் விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும்” என சேலம் மத்திய சட்டக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜோதிமணி பேசியுள்ளார்.