News December 11, 2025
ரசிகர்களுடன் அஞ்சானை கொண்டாடிய சூர்யா

2014-ல் வெளியான அஞ்சான் படம் சோஷியல் மீடியாவில் கடுமையாக டிரோல் செய்யப்பட்டது. ஆனாலும் மனம் தளராத இயக்குநர் லிங்குசாமி, படத்தை ரீ-எடிட் செய்து ரீ-ரிலீஸ் செய்துள்ளார். ஆச்சரியம் என்னவென்றால், முன்பை விட இப்போது படத்திற்கு தியேட்டர்களில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனிடையே ரசிகர்களுடன் நடிகர் சூர்யா படத்தை பார்த்து மகிழ்ந்துள்ளார்.
Similar News
News April 9, 2026
FLASH: ஒரே நாளில் ₹5,000 குறைந்தது

<<19604491>>தங்கத்தை தொடர்ந்து<<>> வெள்ளி நகைகள் விலை இன்று கிலோவுக்கு ₹5,000 குறைந்துள்ளது. சில்லறை விற்பனையில் 1 கிராம் ₹5 குறைந்து ₹260-க்கும், மொத்த விற்பனையில் பார் வெள்ளி 1 கிலோ ₹2,60,000-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் 1 அவுன்ஸ்(28g) 2% விலை குறைந்து 73 டாலர்களுக்கு விற்பனையாவதால் நம்மூர் சந்தையில் மீண்டும் வெள்ளி விலை இறங்குமுகத்தில் உள்ளது கவனிக்கத்தக்கது.
News April 9, 2026
CM ஸ்டாலின் உயிருக்கு பயந்தவர் அல்ல: RS பாரதி

CM ஸ்டாலினுக்கு மக்கள் தரும் ஆதரவை பார்த்து EPS-க்கு வயிற்றெரிச்சல் என RS பாரதி பேசியுள்ளார். கொரோனாவில் <<19603279>>ஸ்டாலின் போய் சேர்ந்திருப்பார்<<>> என பேசிய EPS-க்கு வாய்க்கொழுப்பு என்ற அவர், பிரசாரத்தில் எப்படி பேசவேண்டும் என தெரியாமல் EPS மிக கேவலமாக பேசிவருவதாக சாடினார். மேலும், கொரோனாவின் போது நோயாளிகளை ஸ்டாலின் நேரில் சென்று பார்த்ததாகவும், அதனால் அவர் உயிருக்கு பயந்தவர் அல்ல எனவும் கூறியுள்ளார்.
News April 9, 2026
உங்ககிட்ட பேசுனதுக்கு சுடுகாட்டுல போயி.. சீமான்

திருவொற்றியூர் பிரசாரத்தில் சீமான் ஆதங்கத்துடன் பேசியது அரசியல் கவனம் பெற்றுள்ளது. 15 வருஷமா நானும் பேசிகிட்டே இருக்கேன்; உங்க காதுல விழ மாட்டேங்குது. சுடுகாட்டுல போய் பேசியிருந்தா கூட பாவம் பார்த்து நாலு பிணம் எந்திருச்சி வந்திருக்கும் என வேதனையுடன் கூறியுள்ளார். இந்த முறை எத்தனை பேருக்கு மானம், ரோஷம், சூடு, கோபம் இருக்கிறது என்று பார்க்கலாம் என்றும் அவர் பேசியுள்ளார். உங்கள் கருத்து?


