News April 1, 2025
ரசாயனம் கலந்த தர்பூசணியா? ஒரு டிஷ்யூ பேப்பர் போதும்

ரசாயனங்களை தண்ணீரில் கலந்து அதனை ஊசி மூலமாக தர்பூசணி பழங்களுக்குள் செலுத்துவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ் குமார் அண்மையில் தெரிவித்தார். ரசாயனம் சேர்க்கப்பட்ட தர்பூசணி பழங்கள் அனைத்தும் பார்ப்பதற்கு மிகவும் சிவந்து போய் இருக்கும். அதன் மீது ஒரு டிஷ்யூ பேப்பரை வைத்து தேய்க்கும்போது, டிஷ்யூ பேப்பர் மீது ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறம் படிந்து இருந்தால் அதில் ரசாயனம் கலக்கப்பட்டிருக்கிறது.
Similar News
News April 6, 2025
சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு

சென்னை உயர்நீதிமன்றத்தில் சோப்தார், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 392 பணியிடங்கள் உள்ளன. ரூ.15,700 – ரூ.58,100 சம்பளம் வழங்கப்படும். 8 முதல் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். விருப்பமுள்ளவர்கள் இந்த <
News April 6, 2025
போட்டோகிராபர் மயங்கி விழுந்து பலி

வேலூர் தோட்டப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆதிமூலம் (57). போட்டோகிராபரான இவர், வேலுார் தென்னைமர தெருவில் நேற்று முன்தினம் (ஏப்ரல் 4) நடந்து சென்றபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார். அப்பகுதி மக்கள் அவரை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தெற்கு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News April 6, 2025
வேலூரில் 100 டிகிரி பாரன்ஹீட் வெயில்

வேலூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல் 5) 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். கோடை காலம் தொடங்கி விட்ட நிலையில், கடந்த சில நாட்களாக தினமும் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வேலூரில் வெப்பம் பதிவாகி வருகிறது. இதனால் மக்கள் வீடுகளை விட்டே வெளியே வர தயங்குகின்றனர். உங்க ஏரியாவில் வெயில் எப்படி?