News January 2, 2026
ரகுவரன்-தனுஷ் இடையே அப்பா-மகன் உறவு: ரோகிணி

‘காதல் கொண்டேன்’ படத்தில் தனுஷின் நடிப்பை பார்த்து, இந்த பையன்கிட்ட ஏதோ ஒன்னு இருக்கு என ரகுவரன் கூறியதாக அவரது மனைவி ரோகிணி தெரிவித்துள்ளார். ‘யாரடி நீ மோகினி’ படத்தில் இணைந்து நடித்தபோது, ‘தனுஷ் என் பையன் மாதிரி’ என அடிக்கடி கூறியதாகவும், ‘3’ பட ஷூட்டிங்கில் இதை தனுஷிடம் தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், அவர்களுக்கு இடையேயான பிணைப்பு அப்பா-மகன் உறவு போல இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 16, 2026
பெரும் எதிர்பார்ப்பில் பிரான்ஸ் அதிபரின் இந்திய பயணம்!

4 நாள் பயணமாக இந்தியா வரும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் வருகை சர்வதேச அரங்கில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. பிரான்ஸ் தற்போது இந்தியாவின் 2-வது பெரிய பாதுகாப்பு சப்ளையராக உள்ளது. அதன்படி அவரது இப்பயணத்தில் HAMMER ஏவுகணைகளின் கூட்டு உற்பத்தி, மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் 114 ரஃபேல் போர் விமானங்களுக்கான முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
News February 16, 2026
எவ்வளவு உடற்பயிற்சி செய்தும் எடை குறையவில்லையா?

ஜிம்மில் உடற்பயிற்சி, தினமும் ஜாகிங் என கடினமாக முயன்றும் எடை குறையவில்லை என்று பலர் புகார் செய்வதுண்டு. அதற்கு அதிக கலோரிகளை எரித்துவிட்டதாக நம்புவதும், உடற்பயிற்சிக்கு பிறகு அதிகமாக சாப்பிடுவதுமே காரணம் என உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். உடற்பயிற்சி செய்தாலும் உணவு கட்டுப்பாடு என்பது மிக முக்கியம். அதே போன்று சரியான தூக்கம் இல்லையென்றாலும் எடை குறையாது எனவும் அறிவுறுத்துகின்றனர்.
News February 16, 2026
இந்தியாவின் வெற்றியை பிரசாரமாக மாற்றிய ECI

தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தலையொட்டி ECI வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறது. இந்நிலையில் T20 WC-ல் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்த ECI அதையும் தனது பிரசார கருவியாக மாற்றியுள்ளது. ஒரு போட்டியில் ஒவ்வொரு ரன்னும் எப்படி முக்கியமோ, அதே போல ஜனநாயகத்தில் ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என குறிப்பிட்டு படிவம் 6-ஐ நிரப்பி வாக்காளராக பதிவு செய்ய அறிவுறுத்தியுள்ளது.


