News August 6, 2024
ரகசிய இடத்தில் ஷேக் ஹசீனா?

இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வங்கதேச விமானம் இன்று காலை இந்தியாவில் இருந்து புறப்பட்டுச்சென்ற நிலையில், அவர் மட்டும் இங்கு இருப்பதாகத் தெரிகிறது. இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகத்தில் அடைக்கலம் கோரியுள்ள ஹசீனா, அனுமதி கிடைக்கும் வரை, இங்கேயே தங்கி இருப்பார் என மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
Similar News
News February 1, 2026
Budget 2026: எந்த துறைக்கு எவ்வளவு நிதி?

போக்குவரத்து- ₹5,98,520 கோடி, பாதுகாப்பு- ₹5,94,585 கோடி, ஊரக மேம்பாடு- ₹2,73,108 கோடி, வேளாண்- ₹1,62,671 கோடி, கல்வி- ₹1,39,289 கோடி, சுகாதாரம்- ₹1,04,599 கோடி, நகர்ப்புறம்- ₹85,522 கோடி, IT- ₹74,560 கோடி, தொழில்- ₹70,296 கோடி, சமூகநலன்- ₹62,362 கோடி, அறிவியல்- ₹55,756 கோடி, வரி நிர்வாகம்- ₹45,500 கோடி, வெளியுறவு- ₹22,119 கோடி, நிதித்துறை- ₹20,649 கோடி, வடகிழக்கு மாநில மேம்பாடு- ₹6,812 கோடி.
News February 1, 2026
பட்ஜெட் எதிரொலி: விலை உயரும் பொருள்கள்

மத்திய பட்ஜெட் எதிரொலியால் ஆடம்பர கடிகாரங்கள், இறக்குமதி செய்யப்படும் மதுபானங்கள், சிகரெட், பீடி, குட்கா உள்ளிட்ட புகையிலை பொருள்களின் விலை உயரப் போகிறது. அதேபோல், ATM, விற்பனை இயந்திரங்கள், பின்னலாடைகள், உரம், இரும்பு, நிலக்கரி, உப்பு ஆகியவற்றின் விலை கணிசமாக உயரும்.
News February 1, 2026
மாநிலங்களுக்கு ₹1.4 லட்சம் கோடி அறிவிப்பு

16-வது நிதி ஆணையத்தின் பரிந்துரையின்படி மாநில அரசுகளுக்கான நிதி பகிர்வு 41% ஆகவே தொடரும் என FM நிர்மலா தெரிவித்துள்ளார். மேலும், 2026-27 நிதியாண்டில் மாநிலங்களுக்கு ₹1.4 லட்சம் கோடி வழங்கப்படும் எனவும் இதில் கிராமப்புற, நகர்ப்புற வளர்ச்சி, பேரிடர் மேலாண்மைக்கான மானியங்களும் அடங்கும் என கூறப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கான நிதி பகிர்வு உயர்த்தப்படாததால் ஸ்டாலின் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


