News January 2, 2026

ரகசியங்களை பகிர்ந்த இந்தியா – பாகிஸ்தான்

image

இந்தியா மற்றும் பாகிஸ்தான், ஒவ்வொரு ஆண்டும் ஜன.1-ம் தேதி தங்களிடம் உள்ள அணுசக்தி நிலையங்கள் குறித்த தகவல்களை பரிமாறிக்கொள்ள வேண்டும் என 1988-ல் ஒப்பந்தம் கையெழுத்தானது. மோதல் ஏற்படும்போது அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துவதை தவிர்க்கும் விதமாக இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிலையில், ஒப்பந்தத்தின் படி நேற்று இருநாடுகளும், அணுசக்தி நிலையங்கள் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டன.

Similar News

News February 2, 2026

சீமான் பின்வாங்குகிறாரா?

image

ஏற்கெனவே 100 தொகுதிகளுக்கும் மேல் வேட்பாளர்களை அறிவித்த சீமான், அவர்களை பிப்.21-ல் திருச்சி மாநாட்டில்தான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார் என கூறப்பட்டது. இந்நிலையில் ஏற்கெனவே அறிவித்த இந்த தொகுதிகளில் மாற்றம் இருப்பதாக தகவல் அறிந்தவர்கள் சொல்கின்றனர். நட்சத்திர வேட்பாளர்களின் தொகுதிகள்கூட மாறவிருக்கிறதாம். இதனால் சீமான் ஏன் திடீரென பின்வாங்குகிறார் என அரசியல் விமர்சகர்கள் கேட்கின்றனர்.

News February 2, 2026

கேரளா இந்தியா Map-ல் இருக்கிறதா? பினராயி விஜயன்

image

கேரளாவின் நீண்டநாள் கோரிக்கையான AIIMS உள்பட எந்த புதிய அறிவிப்பும் மத்திய பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என அம்மாநில CM பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார். பட்ஜெட்டில் அம்மாநிலம் புறக்கணிக்கப்பட்டதாக விமர்சித்த அவர், கேரளாவும் இந்தியா Map-ல் தான் உள்ளதாகவும் சாடியுள்ளார். 3 சர்வதேச ஆயுர்வேத நிறுவனங்கள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பில், கேரளாவின் பெயர் இடம்பெறாதது ஏமாற்றமளிப்பதாகவும் கூறியுள்ளார்.

News February 2, 2026

தவெக அளக்க முடியாத ஆழ்கடல்: விஜய்

image

தவெக இன்று 3-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில், ஆட்சி பீடத்தை கைக்கொள்ளும் ஜனநாயக இலக்கை உறுதியாக வெல்வோம் என விஜய் பதிவிட்டுள்ளார். மேலும் சலனங்களை புறந்தள்ளி சமநிலை தவறாத அளக்கவியலாத ஆழ்கடல் தவெக எனவும், 2026 சட்டமன்றத் தேர்தல் களம், இதுவரை இல்லாத புதிய சூழலைச் சுமந்து நிற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சாமானிய மக்களுக்கான அதிகார அரசியலின் வெற்றிப் போர்முரசம் தவெக என்றும் கூறியுள்ளார்.

error: Content is protected !!