News July 13, 2024

யூனியன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த சிறுவன்

image

கோவை சின்னவேடம்பட்டியை சேர்ந்தவர் சரண்யா. இவரது மகன் சர்வஜித்நாராயணன்(12). ஏழாம் வகுப்பு படித்து வரும் இவர் யோகாவில் இரண்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் இவர் பள்ளி வளாகத்தில் 15 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட டவரில் ஏறி சர்வஜித் அஷ்ட கோணாசனம் எனும் ஆசனத்தை தொடர்ந்து ஏழு நிமிடங்கள் 20 விநாடிகள் செய்து யூனியன் உலக சாதனை புத்தகத்தில் இன்று இடம் பிடித்தார்.

Similar News

News August 14, 2025

கோவையைச் சுற்றி: பார்த்தே ஆக வேண்டிய இடங்கள்!

image

பசுமை நிறைந்த கோவை மாவட்டத்தைச் சுற்றி பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. அவற்றில், நீங்கள் பார்த்தே ஆக வேண்டிய 10 இடங்கள்:

▶️ மருதமலை

▶️ சிறுவாணி

▶️ கோவை குற்றாலம்

▶️ பூண்டி வெள்ளியங்கிரிமலை ஆண்டவர் சன்னதி

▶️ ஆழியாறு அணை

▶️ குரங்கருவி

▶️ காடாம்பாறை அணை

▶️ டாப் ஸ்லிப்

▶️ திருமூர்த்தி மலை

▶️ பர்லிக்காடு பரிசல் சவாரி

இதுதவிர வேறு இடங்கள் இருந்தால் தெரிவிக்கவும்! கோவை மக்களே SHARE பண்ணுங்க!

News August 14, 2025

கோவை: வங்கியில் பயிற்சியுடன் மாதம் ரூ.15,000!

image

கோவை மக்களே, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) பணிவாய்ப்பை எதிர்பார்ப்பவரா நீங்கள்? உதவித்தொகையுடன் தொழிற்பயிற்சி பெற விரும்புகிறீர்களா? சரியான நேரம் இதுதான். மொத்தம் 750 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மாதம் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 20.08.2025 ஆகும். SHARE பண்ணுங்க!

News August 14, 2025

மாசு இல்லாத விநாயகர் சதுர்த்தி: கோவை கலெக்டர் அறிவிப்பு!

image

விநாயகர் சதுர்த்தியையொட்டி சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில், களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.பிளாஸ்டிக், தெர்மாகோல் போன்ற பொருட்களால் செய்யப்பட்ட சிலைகளைத் தவிர்க்க வேண்டும். ரசாயன சாயங்கள் பயன்படுத்தப்பட்ட சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கக் கூடாது. இயற்கையான சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என கோவை கலெக்டர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!