News March 19, 2025

யூதர்களை ஹிட்லர் வெறுக்க என்ன காரணம்? (1/2)

image

ஜெர்மன் அதிபராக ஹிட்லர் பதவி வகித்தபோது 1933-1945 வரை லட்சக்கணக்கான யூதர்கள் படுகாெலை செய்யப்பட்டனர். ஹிட்லர் உத்தரவின்படியே இந்த இனப்படுகொலை நடைபெற்றது. இதுபோல யூதர்கள் மீது ஹிட்லர் வெறுப்பு காட்டுவதற்கு சில காரணங்களை வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். முதல் உலகப் போரில் ஜெர்மன் தோல்வியடைந்தது. ஜெர்மன் படையில் சேர்ந்து சண்டையிட்ட ஹிட்லருக்கு கண்ணில் காயம் ஏற்பட்டது.

Similar News

News July 8, 2025

பாமக மேடையில் ராமதாஸின் மூத்த மகள்

image

ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பாமக கூட்ட மேடையில் அவரது மூத்த மகள் காந்திமதி இருந்தது பேசுபொருளாகியுள்ளது. இவரது மகன் ப்ரீத்திவனே அன்புமணியின் மருமகன். இதனால் ப்ரீத்திவனுக்கு கட்சியில் கை ஓங்குவதாகத் தெரிந்தது. இதனாலேயே காந்திமதியின் மற்றொரு மகன் முகுந்தன் தாத்தா மூலம் கட்சியினுள் நுழைய முற்பட்டார். இதில்தான் அப்பா – மகன் இடையே பொதுவெளியில் ஏற்பட்ட மோதல் இன்னும் முற்றுப்பெறாமல் உள்ளது.

News July 8, 2025

பள்ளி வேன் விபத்து… விஜய் உருக்கமாக இரங்கல்

image

கடலூர் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த செய்தியை அறிந்து வேதனை அடைந்ததாக தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுக்கு இரங்கல் தெரிவித்த அவர், விபத்து நடந்த பகுதியில் சுரங்கப் பாதை அமைத்து பொதுமக்கள் பாதுகாப்பாக பயணிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

News July 8, 2025

14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: IMD

image

தமிழகத்தில் இரவு 7 மணி வரை 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, சென்னை, செங்கல்பட்டு, நீலகிரி, கோவை, திருப்பத்தூர், தேனி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடுமாம், வேலூர், திருவண்ணாமலை, நெல்லை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாம். உங்க ஊரில் மழை பெய்யுதா?

error: Content is protected !!