News March 30, 2025
யூடியூப் சேனல் தொடங்க தமிழக அரசு பயிற்சி

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில் ‘சொந்தமாக YouTube சேனலை உருவாக்குதல்’ என்ற 3 நாள் பயிற்சியை நடத்த உள்ளது. வரும் ஏப்ரல் 22ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. ஆண்கள், பெண்கள், திருநங்கைகள் என அனைவரும் கலந்து கொள்ளலாம். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18+ வயதுக்கு மேற்பட்டோர் கலந்து கொள்ளலாம். <
Similar News
News February 8, 2026
அரக்கோணத்தில் துணிகர சம்பவம்!

அரக்கோணம் சாஸ்திரி நகரை சேர்ந்த தம்பதி ஜெயக்குமார், சத்தியவாணி. இந்நிலையில் வீட்டை பூட்டி விட்டு கடைக்கு சென்ற சத்த்யவாணி, வந்து பார்த்த போது பீரோ அருகே நகைகள் கீழே விழுந்து இருந்ததாம். மேலும் பீரோவில் இருந்த ரூ. 25 லட்சம் மதிப்பிலான 25 பவுன் தங்க நகைகள் திருடு போயிருந்தது. இது குறித்து புகார் பெற்ற அரக்கோணம் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 8, 2026
ராணிப்பேட்டையில் செல்லும் வழியில் பிரசவம்!

வாலாஜாவை அடுத்த ஆயிலத்தை சேர்ந்த தம்பதி லாரன்ஸ்- இந்திராணி (22). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு நேற்று அதிகாலை (பிப்.7) திடீரெனப் பிரசவ வலி ஏற்பட்டது. உடனே அவர் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சில் அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே 3: 30 மணிக்கு இந்திராணிக்கு ஆண் குழந்தை பிறந்தது. தாயும் குழந்தையும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
News February 8, 2026
ராணிப்பேட்டை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (பிப்.7) இரவு முதல் இன்று (பிப்.8) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!


