News March 20, 2024
‘யுவிகா’ இளம் விஞ்ஞானிகள் திட்டம்

மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் ‘யுவிகா’ இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை 2019ல் இஸ்ரோ அறிமுகம் செய்தது. இதன்கீழ் மாணவர்கள் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல், செய்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்படும்; இந்தாண்டுக்கான பயிற்சிக் காலம்: மே 13 – 24; விண்ணப்பிக்க இன்றே(மார்ச் 20) கடைசி நாள்; தகுதி: 9ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே; விண்ணப்பிக்க: jigyasa.iirs.gov.in/yuvika.
Similar News
News August 25, 2025
பெரம்பலூர்: ரேஷன் கடையில் பிரச்சனையா? இத பண்ணுங்க

பெரம்பலூர் மாவட்ட மக்களே உங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்கப்படாமலும், தரமில்லாத பொருட்களை வழங்கினால், பணியாளர்கள் சரியான நேரத்திற்கு வராமல், பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் நடந்தால் இனி கவலை வேண்டாம். உடனே 1967(அ)1800-425-5901 என்ற எண்ணை அழைத்து புகார் அளிக்கலாம். மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!
News August 25, 2025
பெரம்பலூர் மாவட்டம் பற்றி ஓர் பார்வை!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தாலுகா, சட்டமன்ற தொகுதிகள், பேருராட்சிகள் என்னன்ன இருக்கின்றது என உங்களுக்கு தெரியுமா?
✅4 தாலுகா
1.பெரம்பலூர்
2.குன்னம்
3.வேப்பந்தட்டை
4.ஆலத்தூர்
✅2 சட்டமன்ற தொகுதி
1.பெரம்பலூர் (தனி)
2.குன்னம்
✅1 நாடாளுமன்ற தொகுதி
1.பெரம்பலூர்
✅4 பேரூராட்சிகள்
1.அரும்பாவூர்
2.இலப்பைகுடிக்காடு
3.குரும்பலூர்
4.பூலாம்பாடி
இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!
News August 25, 2025
பெரம்பலூரில் ஆட்சிமொழிப் பயிலரங்கம் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து அரசுத்துறை அலுவலகங்கள், வாரியங்கள், கழகங்கள் மற்றும் தன்னாட்சி நிறுவனங்களில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் (ம) பணியாளர்களுக்குத் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் 9.9.2025 மற்றும் 10.9.2025 ஆகிய தேதிகளில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சிமொழிப் பயிலரங்கம், ஆட்சிமொழி கருத்தரங்கம் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை நடைபெறவுள்ளதாக ஆட்சியர் அறிவித்துள்ளார்.