News April 17, 2024

யுபிஎஸ்சி தேர்வு: திருவள்ளூருக்கு பெருமை

image

2023ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் இறுதி தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் திருவள்ளூரைச் சேர்ந்த புவனேஷ் ராம் என்பவர் அகில இந்திய அளவில் 41வது இடத்தையும், தமிழ்நாட்டில் முதல் இடத்தையும் பிடித்துள்ளார். பிஎஸ்சி இயற்பியல் பட்டதாரியான இவர் 2019 யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 496வது இடத்தை பெற்றிருந்தார். இந்நிலையில் தற்போது தமிழ்நாட்டின் முதல் இடத்தை பெற்றுள்ளார்.

Similar News

News July 5, 2025

திருவள்ளூரில் இன்றைக்கு கரண்ட் கட்

image

திருவள்ளூரில் இன்று மின் வெட்டு காலை 9 மணி முதல் 2 மணி வரை இருளிப்பட்டு துணை மின் நிலைய பரமரிப்பு பணி காரணமாக ஜனப்பன்சத்திரம் கூட்டு சாலை, அழிஞ்சிவாக்கம், பெரியபாளையம் சாலை, ஸ்ரீநகர், இருளிப்பட்டு, சாய்கிருபா நகர்,MGR நகர், சத்திரம், சித்தி விநாயகர் பண்ணை, ஜகநாதபுரம், ஆமூர், மாலிவாக்கம், குதிரைப்பள்ளம், நெடுவரம்பாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் இன்று கரண்ட் கட் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News July 5, 2025

16வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

image

செங்குன்றம் அலமாதி 16வயது சிறுமியை 6ஆண்டுக்கு மேல் சொந்த சித்தப்பா வன்கொடுமை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது குறித்த புகாரை செங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் உத்தாசனப்படுத்தியுள்ளார். சொந்த சித்தப்பா ஜலாலுதீன் பாலியல் வன்கொடுமையால் தற்போது 4மாத கர்ப்பிணியாக உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவள்ளூர் GHதீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார்.

News July 4, 2025

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரங்கள் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!