News March 23, 2024
யார் இந்த பாஜக வேட்பாளர்?

நாகை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளராக எஸ்.ஜி.எம். ரமேஷ் களமிறக்கப்பட்டுள்ளார். திருவாரூர், சித்தமல்லியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி எஸ்.ஜி முருகையனின் மகனான எஸ்.ஜி.எம்.ரமேஷ், 2022ஆம் ஆண்டு தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். இதனையடுத்து பொதுக்கூட்டம், போராட்டத்திற்கு ஆட்களை திரட்டுவது என பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வந்த இவரது செல்வாக்கை அறிந்த பாஜக தற்போது இவரை களமிறக்கியுள்ளது.
Similar News
News September 25, 2025
நாகை: 10th போதும்.. அரசு வேலை

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ், நாகை மாவட்ட ஊராட்சி ஒன்றிங்களில் காலியாக உள்ள ஓட்டுநர்/அலுவலக உதவியாளர்/எழுத்தர்/ இரவு காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. குறைந்தது 8 & 10-ம் வகுப்பு முடித்தவர்கள், வரும் செப்.30-க்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.16,000 முதல் ரூ.71,000 வரை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு <
News September 25, 2025
நாகை விவசாயிகள் கவனத்திற்கு; ஆட்சியர் அறிவிப்பு

நாகை மாவட்டத்தில் சம்பா தாளடி சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்களுக்கு பண்ணை, குட்டை மற்றும் இதர நீர் ஆதாரங்கள் உள்ளதை உறுதி செய்து கொண்டு, சாகுபடி மேற்கொள்ள வேண்டும். அடுத்த ஆண்டு பிப் .15க்கு பிறகு காவேரி பாசன நீர்வரத்து குறைந்து பயிர் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. விவசாயிகள் தாளடி நெல் பயிரை பிப்.15 ஆம் தேதிக்குள் அறுவடைக்கு வரும் வகையில் தாளடி மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியர் தெரித்துள்ளார்.
News September 25, 2025
நாகை: அரசு தேர்வாளர்களுக்குப் முக்கிய அறிவுறுத்தல்

நாகை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் வருகின்ற செப்.28ம் தேதி குரூப் 2 மற்றும் 2ஏ அடங்கிய தேர்வு நடைபெற உள்ளது. இதில், 13 தேர்வு மையங்களில் 3907 நபர்கள் தேர்வு எழுத உள்ளனர் . தேர்வு நாளன்று 8.30 மணிக்கு முன்னதாகவே தேர்வு மைய அமைவிடத்திற்கு வருகை தர வேண்டும். 9மணிக்கு மேல் தேர்வு மையத்தில் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.