News January 11, 2025
யார் அந்த சார்கள் என 2 சார்கள்தான் கூற வேண்டும்: ஓபிஎஸ்

மதுரை விமான நிலையம் வந்தடைந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். அப்போது, யார் அந்த சார்? என்று சட்டமன்றத்தில் விவாதம் எழுந்து வருவது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, “2சார்கள்தான் சொல்ல வேண்டும்” என நகைச்சுவையாக பேசி சிரித்துவிட்டு காரில் ஏறி பெரியகுளம் புறப்பட்டார்.
Similar News
News January 26, 2026
மதுரை மக்களே இன்று உங்க அதிகாரத்துக்கான நாள்!

1 மதுரை மாவட்டத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது
2. இதில் மக்கள் கலந்து கொண்டு கிராமத்தின் செலவு / வரவு கணக்குகளை பார்வையிட்டு கேள்வி எழுப்பலாம்.
3. கூட்டத்தில் கிராம மக்கள் ஒன்றிணைந்து தீர்மானம் இயற்றினால், அதனை அரசு / அதிகாரிகள் நினைத்தால் கூட ரத்து செய்ய முடியாது.
4. மக்களுக்கு முழு அதிகாரத்தையும் வழங்கும் கிராம சபை கூட்டத்தில் மறக்காமல் கலந்து கொள்ளுங்கள்!
News January 26, 2026
மதுரை : சீனி அட்டை → அரிசி அட்டையாக மாற்றுவது எப்படி?

மதுரை மக்களே, சீனி அட்டையில் இருந்து அரிசி அட்டைக்கு சுலபமாக மாற்றலாம்.
1 இங்கு <
2. அட்டை வகை மாற்றம் சேவையை தேர்ந்தெடுங்க
3. அரிசி ரேஷன் அட்டையை தேர்ந்தெடுங்க
4. சுயவிவரங்களை பதிவு செய்யுங்க 30 நாட்களில் மாறிவிடும்.
விண்ணப்ப நிலையை 78452 52525 இந்த எண்ணுக்கு வாட்ஸ் ஆப்பில் HI அனுப்பி தெரிஞ்சுக்கலாம். இந்த பயனுள்ள தகவலை எல்லாருக்கும் SHARE பண்ணுங்க..
News January 26, 2026
மதுரை: லாரி மோதி டூவீலரில் சென்ற இளைஞர் பலி

சமயநல்லூர் பாத்திமாநகரை சேர்ந்தவர் பாண்டி மகன் முருகவேல் (28). இவர் தனது டூவீலரில் சமயநல்லூரில் இருந்து தேனூர் சாலையில் நேற்று முன்தினம் சென்ற போது, சுல்தான் மரக்கடை எதிரே பின்னால் வந்த லாரி மோதியது. பலத்த காயத்துடன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று பலியானார். சமயநல்லூர் போலீசார் சோழவந்தனை சேர்ந்த லாரி டிரைவர் கணேசனை கைது செய்து விசாரிக்கின்றனர்.


