News April 7, 2025
யாரும் அறியாத கிருஷ்ணகிரி கல்திட்டைகள்

முதுமக்கள் தாழி பற்றி தெரிந்தவர்கள் டால்மென் பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை.கிருஷ்ணகிரியில் மல்லச்சத்திரம் பகுயில் முதுமக்களை அடக்கம் செய்த டால்மென்ஸ் எனப்படும் கற்திட்டைகள் காணப்படுகின்றன.சுற்றிலும் பாறைகளை கொண்டு சிறிய அறை போல் அமைத்து அதில் இறந்தவர்களை அடக்கம் செய்யும் வழக்கம் இருந்துள்ளது. இது போன்று இப்பகுதியில் நிறைய கல் திட்டைகள் உள்ளது. இதை மற்றவர்களும் தெரிந்து கொள்ள ஷேர் பண்ணுங்க
Similar News
News September 14, 2025
கிருஷ்ணகிரி: ஷேர் மார்க்கெட் மோசடி: காவல்துறை எச்சரிக்கை

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை, பொதுமக்களுக்கு, ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்தால், இரண்டு மடங்கு லாபம் என வரும் போலியான அழைப்புகள், குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம் என எச்சரித்துள்ளது. நமது நம்பிக்கையைப் பயன்படுத்தி, பணம் பறிக்கும் மோசடி முயற்சிகள் நடைபெறுவதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. மோசடிகளில் ஏமாந்திருந்தால், உடனடியாக 1930 என்ற எண்ணை அழைக்கலாம்.
News September 13, 2025
கிருஷ்ணகிரி மாவட்டம் இன்று இரவு ரோந்து பணி விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (செப். 13) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது
News September 13, 2025
முதல்வரின் கிருஷ்ணகிரி பயண விவரம்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு, நாளை (செப்.14, ஞாயிற்றுக்கிழமை) சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். தற்போது, அவரின் பயண விவரங்கள் வெளியாகி உள்ளன. காலை 9.30 மணியளவில், ஓசூர் விமான நிலையம் வந்தடைந்து, காலை 9.45 மணிக்கு, கிருஷ்ணகிரிக்கு புறப்படுகிறார். பின்னர், காலை 11 மணியளவில், கிருஷ்ணகிரியில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளார்.