News January 16, 2026
யாருடன் கூட்டணி: ராமதாஸ் புதிய ஸ்கெட்ச்

தொகுதி எண்ணிக்கையைவிட, ராமதாஸை சேர்க்கக்கூடாது என்ற நிபந்தனையுடன்தான், அதிமுக கூட்டணியில் அன்புமணி (பாமக) இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ராமதாஸ் யாருடன் கூட்டணி வைப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், அதிமுக கூட்டணியில் அன்புமணிக்கு ஒதுக்கும் தொகுதிகளை விட, கூடுதலான தொகுதிகள் ஒதுக்கீடு செய்தால் திமுக கூட்டணியில் இணைய ராமதாஸ் ரெடியாக இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
Similar News
News February 4, 2026
வக்கீலாக மாறும் CM மம்தா பானர்ஜி

மேற்கு வங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட SIR பணிகளின் அடிப்படையில் 58 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இது பாஜகவின் சதி என சாடும் அம்மாநில CM மம்தா பானர்ஜி, சுப்ரீம் கோர்ட்டில் SIR மற்றும் ECI-க்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில், அவரே நேரில் ஆஜராகி வாதாடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுப்ரீம் கோர்ட் வரலாற்றில் சிட்டிங் CM ஒருவர் வழக்கில் வாதாட இருப்பது இதுவே முதல்முறையாகும்.
News February 4, 2026
அப்துல்கலாம் பொன்மொழிகள்!

*ஒரு தேசம் ஊழலில்லாமலும், அறிவாளிகளின் தேசமாகவும் இருக்க மூன்று பேரால் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும். தந்தை, தாய், ஆசிரியர்தான் அந்த மூன்று பேர் *தேசம் என்பது எந்தவொரு தனிமனிதனுக்கும், நிறுவனத்துக்கும், கட்சிக்கும் அப்பாற்பட்டது *ஒரு தேசத்தின் மகுடமே அதன் சிந்தனையாளர்கள்தான் *தோல்விகளை எதிர்கொள்ள கற்றுக் கொள்ளுங்கள். அதுதான் வெற்றிக்கான மிக முக்கியமான திறமை.
News February 4, 2026
கடாஃபியின் மகன் சுட்டுக்கொலை

மறைந்த லிபிய அதிபர் மும்மர் கடாஃபியின் மகன் சைஃப் அல் இஸ்லாம் கடாஃபி (53) சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஜிந்தன் நகரில் உள்ள சைஃப் கடாஃபியின் வீட்டிற்குள் நுழைந்த 4 பேர், அவரை சுட்டுக்கொன்றதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை அவரது அரசியல் ஆலோசகர் அப்துல்லா ஓத்மன் SM-ல் உறுதிப்படுத்தியுள்ளார். அவர் அரசுப் பதவிகளில் இல்லையென்றாலும், லிபியாவில் மிகவும் சக்திவாய்ந்த நபராக கருதப்பட்டார்.


