News January 3, 2026

யாருடன் கூட்டணி? தேமுதிகவின் கிளைமாக்ஸ்

image

தேமுதிக யாருடன் கூட்டணி என்ற கிளைமாக்ஸை வரும் 9-ம் தேதி பிரேமலதா விஜயகாந்த் வெளியிட உள்ளதாக விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார். வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்தநாளையொட்டி மதுரையில் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் பேசிய அவரிடம் திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறதா என கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை; நண்பனும் இல்லை என சூசகமாக பதில் அளித்தார்.

Similar News

News January 5, 2026

திமுகவில் இருந்து விலகி விஜய் கட்சியில் இணைந்தார்

image

திமுக, அதிமுக, தவாக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் இன்று விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்துள்ளனர். காலை முதலே பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், திமுகவின் தஞ்சை மத்திய மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் சி.சுந்தரபாண்டியன் தவெகவில் ஐக்கியமாகியுள்ளார். மேலும், தவாகவை சேர்ந்த ஜெகதீச பாண்டியன், காமராஜரின் பேத்தி மயூரி, நடிகர் வேல ராமமூர்த்தியின் மகன் ராஜ்மோகன் உள்ளிட்டோரும் தவெகவில் இணைந்துள்ளனர்.

News January 5, 2026

BREAKING: சென்னையில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டது

image

சென்னை, சேத்துப்பட்டில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்தில் சிக்கியது. சேத்துப்பட்டு பணிமனையிலிருந்து எழும்பூர் ரயில் நிலையத்திற்கு இயக்கப்பட்டபோது, இந்த விபத்து நிகழ்ந்தது தெரியவந்துள்ளது. ரயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரிய பாதிப்பு இல்லை; அந்த வழித்தடத்தில் மட்டும் ரயில்கள் இயக்கப்படவில்லை எனவும், சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

News January 5, 2026

ALERT: பெண்களே இந்த அறிகுறிகள் இருக்கிறதா?

image

சமீபத்தில் 30 வயது பெண்ணின் கருப்பையிலிருந்து <<18767667>>16 கிலோ<<>> நார்த்திசுக் கட்டி அகற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இக்காலத்தில் பெண்களிடையே அதிகரித்து வரும் உடல்பருமன், முன்கூட்டிய மாதவிடாய் மற்றும் தாமதமான கர்ப்பம் ஆகியவை நார்த்திசுக்கட்டிகளின் வளர்ச்சியைத் தூண்டுகின்றன. எனவே இதற்கான அறிகுறிகள் தென்படும்போது தாமதிக்காமல் உரிய பரிசோதனைகள் மேற்கொள்வதே நல்லது என்கிறார்கள் டாக்டர்கள்.

error: Content is protected !!