News April 5, 2025

யானை முகம் கொண்ட சிவன்

image

கிருஷ்ணகிரி மாவட்டம் அத்திமுகம் கிராமத்தில் உள்ளது ஐராவத ஈசுவரர் கோயில். முன்,பின் என இரட்டை கருவறைகள் கொண்ட இந்த கோயிலின் பின்புறம் உள்ள கருவறையில் உள்ள லிங்கத்தில் யானையின் முகம் உள்ளது.ஹஸ்தி என்ற யானை வந்து வழிபட்டதால் லிங்கம் யானை முகம் பெற்றது. அதனால் இந்த ஊர் முதலில் ஹஸ்திமுகம் என பெயர் பெற்று இன்று அத்திமுகம் என மாறியுள்ளது. தகவல் பிடிச்சிருந்தா ஷேர் பண்ணுங்க..

Similar News

News April 6, 2025

சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு

image

சென்னை உயர்நீதிமன்றத்தில் சோப்தார், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 392 பணியிடங்கள் உள்ளன. ரூ.15,700 – ரூ.58,100 சம்பளம் வழங்கப்படும். 8 முதல் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்கை<<>> கிளிக் செய்து வரும் மே மாதம் 5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்.

News April 6, 2025

வாகன விபத்தில் இளைஞர் பலி

image

ஓசூர் அருகே பேரண்டபள்ளி இருந்து தொரபள்ளி செல்லும் சாலையில், இரு சக்கர வாகனத்தில் சென்ற பைரமங்களத்தை சேர்ந்த வெங்கடேஷ் 26 என்பவர், தொரபள்ளி அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த கரண்ட் கம்பத்தின் மீது மோதினார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவர் தலைகவசம் அணியவில்லை. இருசக்கர வாகன ஓட்டிகளே தலைகவசம் அணிந்து செல்லுங்கள் (தலை கவசம் உயிர் கவசம்)

News April 5, 2025

மெஷின் ஆப்பரேட்டர் வேலைவாய்ப்பு

image

கிருஷ்ணகிரியில் உள்ள டெல்டா சிஎன்சி அப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தில் மெஷின் ஆப்பரேட்டர் பணிக்கு ஆட்கள் சேர்ப்பு. இந்த வேலைக்கு 18-25 வயதுக்குட்பட்டவர்கள் டிப்ளமா கல்வி தகுதி பெற்றிருந்தால் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.15,000 வழங்கப்படும். இப்பணிக்கு 50 காலி பணியிடங்கள் உள்ளது. இவ்வேலையில் இணைய விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்கை <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

error: Content is protected !!