News March 24, 2025
யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு

வெள்ளியங்காடு அடுத்துள்ள பில்லூர் அணை மாட்டுப்பட்டி மாரியம்மன் கோவில் அருகே நேற்று அடையாளம் தெரியாத சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. விரைந்து சென்ற போலீசார் சடலத்தை மீட்டு மேட்டுப்பாளையம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து இறந்தவர் யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News September 23, 2025
விதிமீறலில் ஈடுபட்ட டிரைவரின் லைசன்ஸ் 7 நாள் தடை!

மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை நோக்கி சென்ற சத்யஸ்ரீ என்ற தனியார் பேருந்து சில தினங்களுக்கு முன் காரமடையில் நெரிசல் காரணமாக மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் எதிர் திசையில் பேருந்தை டிரைவர் இயக்கியுள்ளார். இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து அலுவலர் சத்யகுமார் தனியார் பேருந்து டிரைவரின் லைசென்ஸ் மீது ஏழு நாட்கள் தடை விதித்து உத்தரவிட்டார்.
News September 23, 2025
கோவையில் இலவச AI தொழில்நுட்ப பயிற்சி!

கோவையில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச Artificial Intelligence Programmer பயிற்சி வழங்கப்படுகிறது. 75 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில் AI தொழில்நுட்பம் தொடர்பான அனைத்தும் கற்றுத்தரப்படுகிறது. இதற்கு டிகிரி முடித்தால் போதுமானது. இதற்கு விண்ணப்பிக்க <
News September 23, 2025
கோவை: பெண்களுக்கான தையல் பயிற்சி முகாம்

கோவை மக்கள் சேவை மையம், பாலம்மாள் தொண்டு நிறுவனம் இணைந்து நடத்தும் சுயம் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி மைய வகுப்புகள் தொடங்கும் விழா, கணபதியில் இன்று(செப்.23) நடைபெற்றது. இதனை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தொடங்கி வைத்தார்.