News October 22, 2024

யமஹா நிறுவனம் விரிவாக்கம்: புதிய வேலைவாய்ப்பு

image

ஸ்ரீபெரும்புதூரில் ரூ.180 கோடியில் இருசக்கர வாகன உற்பத்தி தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய உள்ளதாக யமஹா நிறுவனம் தெரிவித்துள்ளது. வல்லம், வடகாலில் உள்ள தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பம் கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, 5,203 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ள நிலையில், கூடுதலாக 431 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உங்கள் கருத்து?

Similar News

News November 20, 2024

45 பயணிகளை காப்பாற்றிய பேருந்து ஓட்டுநர் பலி

image

சுங்குவார்சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் திரிக்க்ஷன் (47). அரசு பேருந்து ஓட்டுநரான இவர், சுங்குவார்சத்திரத்தில் இருந்து பூந்தமல்லி நோக்கி நேற்று அரசு பேருந்து இயக்கிச் சென்று கொண்டிருந்தார். ஸ்ரீபெரும்புதூர் அருகே திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. பேருந்தை சாதுரியமாக நிறுத்தி, 45 பயணிகளின் உயிரை காப்பாற்றினார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

News November 20, 2024

கலை பண்பாட்டுத் துறை விருதுக்கு விண்ணப்பம்

image

காஞ்சிபுரத்தில், கலை பண்பாட்டுத் துறை விருது வழங்கப்பட உள்ளது. ஓவியம் மற்றும் சிற்பக் கலைஞர்கள், தங்களது கலைப் படைப்புகளை தன் விபரக்குறிப்புடனும், படைப்புகளின் எண்ணிக்கை விவரங்களுடனும், உதவி இயக்குநர், மண்டலக் கலை பண்பாட்டு மையம், சதாவரம், (காது கேளாதோர் அரசு உயர் நிலைப் பள்ளி அருகில்), ஓரிக்கை அஞ்சல் என்ற முகவரிக்கு வரும் டிச.2ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

News November 20, 2024

வீட்டிலேயே பிரசவம் பார்த்த கணவன்: போலீஸ் விசாரணை

image

குன்றத்தூர், நந்தம்பாக்கத்தைச் சேர்ந்த மனோகரன், கடந்த 17ஆம் தேதி தன்னுடைய மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார். இந்த அனுபவத்தை தன்னுடைய வாட்ஸ் அப் குழுவில் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து, எழுச்சூர் வட்டார மருத்துவ அலுவலர் அப்துல் ஜலீல் குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வீட்டில் குழந்தை பெற்றவர்களின் அனுபவம் என்ற வாட்ஸ் ஆப் குழுவில் மொத்தம் 1024 பேர் உள்ளது குறிப்பிடத்தக்கது.