News April 1, 2025

மோட்டார்சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி

image

வள்ளிமலை அருகே திருவப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் (வயது 22). இவர் நேற்று இரவு திருவலத்திலிருந்து வீட்டுக்கு வள்ளிமலை-பொன்னை செல்லும் பிரதான சாலையில் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார்சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருவலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News January 31, 2026

வேலூரில் தொழிலாளர் துறையினர் அதிரடி!

image

வேலூர் தொழிலாளர் உதவிகமிஷனர் (அமலாக்கம்) வரதராஜன் தலைமையில் குழுவினர் நேற்று (ஜன.30) வேலூர் நேதாஜி மார்கெட், மீன் மார்க்கெட், மெயின் பஜார், மாங்காய் மண்டி, மற்றும் இறைச்சி கடைகளில் திடீரென கூட்டாய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது வணிகர்கள் தாங்கள் பயன்படுத்தும் எடையளவுகளை உரிய காலத்திற்குள் மறுமுத்திரையிடவும், மறுமுத்திரை சான்றினை நன்கு தெரியும்படி வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

News January 31, 2026

வேலூர்: மாணவர்களுக்கு பரிசு வழங்கிய ஆட்சியர்!

image

மனிதநேய வார விழாவையொட்டி வேலூரில் மாவட்ட அளவில் போட்டிகள் நடைபெற்றன. நேற்று (ஜன.30) நடைபெற்ற நிகழ்வில் ஆட்சியர் வி.ஆர். சுப்புலட்சுமி கலந்து கொண்டு கவிதை, கட்டுரை, ஓவியம், பேச்சு உள்ளிட்ட போட்டிகளில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் மொத்தம் 159 பேர் பங்கேற்றனர் .

News January 31, 2026

தரம் குறைந்த உரங்கள்; விவசாயிகள் கவலை!

image

வேலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று (ஜன.30) மாவட்ட வருவாய் அலுவலர் மா. சிவசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தரமற்ற உரங்கள் விநியோகம் செய்யப்படுவதால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர். மேலும் கலப்பு உரங்களில் மண் அதிகளவில் கலந்திருப்பதால் பயிர்களின் வளர்ச்சி மற்றும் விளைச்சல் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!