News August 25, 2024

மோடி 3.0 அரசுக்கு எதிராக மீண்டும் போராட்டம்

image

மத்திய அரசுக்கு எதிராக நவ. 26ஆம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்தவுள்ளதாக சம்யுக்தா கிசான் மோர்ச்சா அறிவித்துள்ளது. வேளாண் விளைபொருட்களின் MSP உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாமல், பட்ஜெட்டில் விவசாயிகளை மோடி அரசு புறக்கணித்துள்ளதாக விவசாய சங்கங்கள் விமர்சித்துள்ளன. அத்துடன், விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள 4 மாநிலங்களிலும் பாஜகவுக்கு எதிராக களம் காணவுள்ளதாகவும் அவை அறிவித்துள்ளன.

Similar News

News August 10, 2025

இயக்குநர் அவதாரம் எடுக்கும் கருணாஸ் மகன்?

image

அம்பாசமுத்திரம் அம்பானி, நெடுஞ்சாலை உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக அசத்தியவர் கருணாஸ் மகன் கென். வெற்றிமாறனின் ‘அசுரன்’ படம் கென் கருணாஸுக்கு திருப்புமுனையாக அமைந்தது. விடுதலை 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த கென், தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் உதவி இயக்குநராகவும் பணியாற்றினார். இந்நிலையில் கருணாஸ் தயாரிக்க, கென் ஒரு படத்தை இயக்க போகிறாராம். விரைவில் அறிவிப்பு வருமாம்.

News August 10, 2025

சிக்கன் சாப்பிட்டால் ஆபத்து?

image

சிக்கன் இறைச்சியை ஆற்றல் தரும் பவர்ஹவுஸ் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். சிக்கன் சாப்பிடுவதால் பின்வரும் நன்மைகள் கிடைக்கும்: உங்கள் எலும்புகளும் தசைகளும் வலுப்பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதய ஆரோக்கியம் மேம்படும். மனநிலை சீராகும். அதேநேரம், அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால் கொலஸ்டிராலும், உடல் பருமனும் அதிகரிக்கும். சிலருக்கு அலர்ஜி, இன்பெக்‌ஷன், ஹார்மோன் பிரச்னைகளும் ஏற்படலாம்.

News August 10, 2025

எவ்வளவு சிக்கன் சாப்பிட்டால் நல்லது?

image

சத்தான உணவான சிக்கனை அளவாக சாப்பிட வேண்டும் என டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். ஒரு நாளைக்கு சராசரியாக 100 – 120 கிராம் என வாரத்துக்கு மூன்று நாள்கள் சாப்பிடுவது ஆரோக்கியமானது. சிக்கனின் மேல்தோல் நீக்கினால், ஓரளவு கொழுப்பை குறைக்கலாம். சிக்கனின் மார்பு பகுதியில் தான் அதிக புரோட்டீன் உள்ளது. Fried டிஷ்களைவிட, வேக வைக்கப்பட்ட டிஷ்கள் நல்லது. வீட்டில் சமைத்து சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம்.

error: Content is protected !!